2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மூன்றாமிடத்துக்கு முன்னேறிய வோக்ஸ்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 07 , பி.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் முன்னேறியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான தொடரின் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதையடுத்தே, ஏழாமிடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ட்ரெண்ட் போல்ட், 2. மெஹிடி ஹஸன் மிராஸ், 3. கிறிஸ் வோக்ஸ், 4. முஜீப் உர் ரஹ்மான், 5. மற் ஹென்றி, 6. ஜஸ்பிரிட் பும்ரா, 7. ககிஸோ றபாடா, 8. ஜொஷ் ஹேசில்வூட், 9. பற் கமின்ஸ், 10. முஸ்தபிசூர் ரஹ்மான்.

இதேவேளை, சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையிலும், நான்காமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி மூன்றாமிடத்தை வோக்ஸ் அடைந்துள்ளார்.

  1. ஷகிப் அல் ஹஸன், 2. மொஹமட் நபி, 3. கிறிஸ் வோக்ஸ், 4. பென் ஸ்டோக்ஸ், 5. ரஷீட் கான்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. பாபர் அஸாம், 2. விராட் கோலி, 3. ரோஹித் ஷர்மா, 4. றொஸ் டெய்லர், 5. ஆரோன் பின்ஞ், 6. ஜொனி பெயார்ஸ்டோ, 7. பக்கர் ஸமன், பப் டு பிளெஸி, 9. டேவிட் வோணர், ஷே ஹோப்.

இந்நிலையில், தென்னாபிரிக்காவுக்கு எதிரான இறுதி மூன்று இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளிலும் 86 ஓட்டங்களைப் பெற்ற எவின் லூயிஸ், துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் 10ஆம் இடத்திலிருந்து ஒன்பதாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. டேவிட் மலன், 2. ஆரோன் பின்ஞ், 3. பாபர் அஸாம், 4. டெவோன் கொன்வே, 5. விராட் கோலி, 6. லோகேஷ் ராகுல், 7. கிளென் மக்ஸ்வெல், 8. றஸி வான் டர் டுஸன், 9. எவின் லூயிஸ், 10. மார்டின் கப்தில்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. தப்ரையாஸ் ஷம்சி, 2. ரஷீட் கான், 3. அஸ்தன் அகர், 4. அடில் ரஷீட், 5. வனிடு ஹஸரங்க, 6. முஜீப் உர் ரஹ்மான், 7. டிம் செளதி, 8. அடம் ஸாம்பா, 9. இஷ் சோதி, 10. மிற்செல் சான்ட்னெர்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. மொஹமட் நபி, 2. ஷகிப் அல் ஹஸன், 3. கிளென் மக்ஸ்வெல், 4. றிச்சர்ட் பெரிங்டன், 5. கரெத் டெலனி.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .