2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

ஏழாமிடத்துக்கு முன்னேறிய றிஸ்வான்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 21 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில், ஏழாமிடத்துக்கு பாகிஸ்தானின் மொஹமட் றிஸ்வான் முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்துக்கெதிரான மூன்று இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளிலும் 176 ஓட்டங்களைப் பெற்ற றிஸ்வான், 11ஆம் இடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தை அடைந்துள்ளார்.

இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கெதிரான கடைசி இரண்டு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளிலும் 110 ஓட்டங்களைப் பெற்ற எவின் லூயிஸ், 10ஆம் இடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. டேவிட் மலன், 2. பாபர் அஸாம், 3. ஆரோன் பின்ஞ், 4. டெவோன் கொன்வே, 5. விராட் கோலி, 6. லோகேஷ் ராகுல், 7. மொஹமட் றிஸ்வான், 8. எவின் லூயிஸ், 9. மார்டின் கப்தில், 10. றஸி வான் டர் டுஸன்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. தப்ரையாஸ் ஷம்சி, 2. ரஷீட் கான், 3. வனிடு ஹஸரங்க, 4. அடில் ரஷீட், 5. முஜீப் உர் ரஹ்மான், 6. டிம் செளதி, 7. அடம் ஸாம்பா, 8. அஸ்தன் அகர், 9. இஷ் சோதி, 10. பேபியன் அலென்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. மொஹமட் நபி, 2. ஷகிப் அல் ஹஸன், 3. றிச்சர்ட் பெரிங்டன், 4. கிளென் மக்ஸ்வெல், 5. கரெத் டெலனி.
     

இந்நிலையில், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் எட்டாமிடத்துக்கு பங்களாதேஷின் ஷகிப் அல் ஹஸன் முன்னேறியுள்ளார்.

சிம்பாப்வேக்கெதிரான மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் எட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதையடுத்தே 17ஆம் இடத்திலிருந்து ஒன்பது இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தை ஷகிப் அல் ஹஸன் அடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ட்ரெண்ட் போல்ட், 2. முஜீப் உர் ரஹ்மான், 3. கிறிஸ் வோக்ஸ், 4. மெஹிடி ஹஸன் மிராஸ், 5. மற் ஹென்றி, 6. ஜஸ்பிரிட் பும்ரா, 7. ஜொஷ் ஹேசில்வூட், 8. ஷகிப் அல் ஹஸன், 9. ககிஸோ றபாடா, 10. பற் கமின்ஸ்.

இந்நிலையில், துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் பத்தாமிடத்துக்கு தென்னாபிரிக்காவின் குயின்டன் டி கொக் முன்னேறியுள்ளார்.

அயர்லாந்துக்கெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் 120 ஓட்டங்களைப் பெற்ற டி கொக், 11ஆம் இடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி 10ஆம் இடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. மொஹமட் றிஸ்வான், 2. விராட் கோலி, 3. ரோஹித் ஷர்மா, 4. றொஸ் டெய்லர், 5. ஆரோன் பின்ஞ், 6. ஜொனி பெயார்ஸ்டோ, 7. டேவிட் வோணர், ஷே ஹோப், 9. பப் டு பிளெஸி, 10. குயின்டன் டி கொக்.

முதல் ஐந்து சகலதுறை வீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஷகிப் அல் ஹஸன் 2. மொஹமட் நபி, 3. கிறிஸ் வோக்ஸ், 4. ரஷீட் கான், 5. மிற்செல் சான்ட்னெர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .