2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

லெவர்குசனிடம் தோற்றது அத்லெட்டிகோ

Editorial   / 2019 நவம்பர் 07 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பெயார் லெவர்குசனின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான குழு டி போட்டியொன்றில் 1-2 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் தோற்றது.

லெவர்குசன் சார்பாக பெறப்பட்ட கோலை கெவின் வொலான்ட் பெற்றிருந்ததோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. அத்லெட்டிகோ சார்பாகப் பெறப்பட்ட கோலை அல்வரோ மொராட்டா பெற்றிருந்தார்.

இதேவேளை, தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியுடனான குழு சி போட்டியொன்றை 1-1 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான அத்லாண்டா 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடித்திருந்தது.

மன்செஸ்டர் சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை ரஹீம் ஸ்டேர்லிங் பெற்றதோடு, அத்லாண்டா சார்பாகப் பெறப்பட்ட கோலை மரியோ பசாலிச் பெற்றிருந்தார்.

இந்நிலையில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற துருக்கியக் கழகமான கலாட்டாசரேயுடனான குழு ஏ போட்டியொன்றில் 6-0 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் வென்றது. றியல் மட்ரிட் சார்பாக, றொட்றிகோ மூன்று கோல்களையும், கரிம் பென்ஸீமா இரண்டு கோல்களையும், சேர்ஜியோ றாமோஸ் ஒரு கோலையும் பெற்றனர்.

இதேவேளை, தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற பெல்ஜியக் கழகமான கிளப் ப்ரூகேயுடனான குழு ஏ போட்டியொன்றில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன், இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை நடைபெற்ற பெல்ஜியக் கழகமான சிர்வெனா ஸவெஸ்டாவுடனான குழு பி போட்டியொன்றில் 4-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வென்றது. டொட்டென்ஹாம் சார்பாக, சண் ஹெயுங்-மின் இரண்டு கோல்களையும், ஜியோவனி லோ செல்ஸோ, கிறிஸ்டியன் எரிக்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.

இதேவேளை, நேற்றிரவு நடைபெற்ற ரஷ்யக் கழகமான லொகோமோட்டிவ் மொஸ்கோவுடனான குழு டி போட்டியொன்றில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸும் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது. ஜுவென்டஸ் சார்பாக, ஆரோம் றம்சி, டக்ளஸ் கொஸ்டா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர். லொகோமொட்டிவ் மொஸ்கோ சார்பாகப் பெறப்பட்ட கோலை அலெக்ஸெய் மிரான்சுக் பெற்றிருந்தார்.

இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற சேர்பியக் கழகமான ஒலிம்பியாக்கோஸுடனான குழு பி போட்டியொன்றில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சும் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது. பயேர்ண் சார்பாக, றொபேர்ட் லெவன்டோஸ்கி, இவான் பெரிசிக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X