2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

இங்கிலாந்துத் தொடர் குறித்து மோட்டார்சா நம்பிக்கை

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 21 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஒக்டோபர் மாதம், முழுமையான தொடரொன்றுக்காக இங்கிலாந்து, பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் செய்யும் என்ற நம்பிக்கையிருப்பதாக பங்களாதேஷின் ஒருநாள் சர்வதேசப் போட்டி, இருபதுக்கு-20 போட்டிகளின் தலைவர் மஷ்ரஃபி மோட்டார்சா தெரிவித்துள்ளார்.

இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடருக்காக, எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி, பங்களாதேஷுக்கு இங்கிலாந்து செல்வதாக இருக்கின்ற நிலையில், உடற்றகுதியைக் கருத்திற் கொண்டு, 30 பேர் கொண்ட பங்களாதேஷ் குழாமானது, கடந்த புதன்கிழமை (20) முதல் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளது.

தொடர் நடைபெற வேண்டும் என தான் தனிப்பட்ட முறையில் நம்புவதாக தெரிவித்துள்ள மோட்டார்சா, பங்களாதேஷில் கிரிக்கெட்டை பின்தொடருபவர்கள், பங்களாதேஷில் இடம்பெறும் தொடருக்காக நீண்ட காலமாக காத்திருப்பதாக கூறியுள்ளார். பங்களாதேஷ் மக்கள், கிரிக்கெட்டை விரும்புவர்கள் என்றும், இங்கிலாந்து, தொடரொன்றுக்காக வருமென்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து, எப்போதும் பங்களாதேஷுக்கு உதவியுள்ளதாகவும், அவர்கள், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணதுக்கு அணியை அனுப்பியதாகவும், ஏனைய கிரிக்கெட் அணிகள் பெறுவது போன்று, கட்டாயம் பாதுகாப்பை பெற்றுக் கொள்வர் என்று மோட்டார்சா மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இம்மாதம் ஜூலை முதலாம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலையடுத்து, குறித்த தொடர் நடைபெறுமா என்பது தொடர்பில், அரசாங்கத்தின் ஆலோசனையைப் பின்பற்றவுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்திருந்ததுடன், இங்கிலாந்தின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளின் தலைவரான ஒயின் மோர்கனும், தொடர் குறித்த பாரிய கரிசனையை வெளிப்படுத்தியிருந்தார்.

இதனையடுத்து, இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் கரிசனை சாதாரணமானது என்றும், ஆனால், பொதுவான இடமொன்றில் தொடரினை விளையாடுவதை எதிர்த்திருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .