2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வெட்டிவிடுங்கள்…

Editorial   / 2022 நவம்பர் 09 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் மற்றும் சாலைகடல் நீர் ஏரிகள் மழைவெள்ளத்தினால் நிரம்பி காணப்படுவதால் போக்குவரத்து செய்வதில் மக்கள் இடர்களை எதிர்கொண்டுள்ளனர்.

இதனால், இரண்டினையும் வெட்டிவிடுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை வெள்ளம் காரணமாக நந்திக்கடல் நீர் ஏரி நிரம்பியுள்ளதால் வட்டுவாகல் பாலத்துக்கு மேலாக வெள்ளநீர் வழிந்தோடிவருகின்றது

இதனால் இந்த பாலம் ஊடாக போக்குவரத்து செய்வதில் இடர்களை எதிர்கொண்டுள்ளார்கள். இதேவேளை சாலைக்கடல் நீர் ஏரியும் மழைவெள்ளத்தினால் நிரம்பி காணப்படுவதால் மக்கள் போக்குவரத்து செய்வதில் இடர்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

இரட்டைவாய்க்கால் சாலை வீதியில் சுமார் 5 கீலோமீற்றர் தூரத்திற்கு வெள்ள நீர் காணப்படுவதால்  போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் வலைஞர் மடம்,அம்பலவன் பொக்கணை,மாத்தளன் மக்களின் போக்குவரத்து மழைவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

மழைவெள்ளம் தேங்கி நிற்பதால் தாழ் நில பிரதேசங்களை அண்டிய  விவசாய செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய செய்கைக்கு செல்லும் மூன்று பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வீதிகளில் மழைவெள்ளம் காணப்படுவதால் வட்டுவாகல் பாலத்தினையும்  சாலை முகத்துவாரத்தினையும் உடனடியாக வெட்டிவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

வெட்டினால்தான் வீச்சுவலை தொழில் செய்யமுடியும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதேவவேளை வட்டுவாகல் கடல் வெட்டுவது தொடர்பில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் கொண்ட குழுவின் தீர்மானத்திற்கு அமையவே வெட்டப்படுமென முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக மழைபெய்யுமாக இருந்தால் வட்டுவாகல் பாலத்தின் ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதுடன் மாத்தளன்,அம்பலவன் பொக்களை பகுதிகளில் மக்களின் வீடுகளுக்குள் வெள்ள நீர்  அபயாம் காணப்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளார்கள். செ.கீதாஞ்சன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .