2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

புத்தரிசி விழா...

Editorial   / 2023 மார்ச் 24 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கியாஸ் ஷாபி 

திருகோணமலை மாவட்ட விவசாயிகளின் பெரும்போக அறுவடைக்கான 56ஆவது வருட புத்தரசி விழா, சேருநுவர கமநல சேவைகள் நிலையத்தில் இன்று ( 24)  வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இவ்விழா, திருகோணமலை மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள மாவட்ட உதவி ஆணையாளர் என்.விஸ்ணுதாசன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, திருகோணமலை மாவட்ட விவசாயிகளின் அறுவடையைக் கௌரவிக்கு முகமாக 40 சட்டிகளில் அரிசி வைக்கப்பட்டு, அவை எதிர்வரும் 2ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெற இருக்கின்ற தேசிய மட்ட குத்தரிசி விழாவுக்குக் கொண்டு செல்வதற்காக வைக்கப்பட்ட பிரதான பாத்திரத்தில் இடப்பட்டது.

இந்த விழாவில், திருகோணாமலை மாவட்ட தலைமை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ல்.எம். கைசர், மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர் ச. தவநாதன் சேருநுவர கமநல சேவை அபிவிருத்தி நிலைய உத்தியோகத்தர் எஸ். நவ்பர் மற்றும் கமநல சேவை நிலைய ஊழியர்கள், சர்வ மத தலைவர்கள், விவசாய சங்கங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .