2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொலை மிரட்டல்; ஐ.நா கடும் கண்டனம்

Editorial   / 2021 செப்டெம்பர் 15 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைதிகளை தவறாக நடத்துவது கண்டிக்கத்தக்கது. என இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மண்டேலா விதிகளின்படி, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது அரசின் கடமை என்று இலங்கையில் உள்ள ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி கூறினார்.

சிறைச்சாலை சீர்திருத்தம் மற்றும் போதை மறுவாழ்வு தொடர்பான எங்கள் பணிகளில், சிறையில் உள்ள அனைவரின் உரிமைகளையும் நிலைநாட்டும் திறனை வலுப்படுத்த ஐ.நா., இலங்கை செயல்படுகிறது மற்றும் கைதிகளை தவறாக நடத்துவதை கண்டிக்கிறது, ”என்று ஹனா சிங்கர்-ஹம்டி டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்..

சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த , தமிழ் அரசியல் கைதிகளை கொலை செய்வதாக மிரட்டியதாக குற்றச்சாட்டுக்கு மத்தியில் அவரது இவ்வாறு தனது டுவிட்டில் பதிவொன்றை இட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த செப்டம்பர் 12 ஞாயிற்றுக்கிழமை அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று இரண்டு கைதிகளை மண்டியிடச் செய்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக இராஜாங்க அமைச்சரை பதவி நீக்கம் செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி   அரசாங்கத்துக்கு அழுத்தம் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X