2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியான முதல் காலாண்டு நிதிப் பெறுபேறுகளைப் பதிவு

J.A. George   / 2022 ஜூன் 07 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

2022 நிதியாண்டை யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி உறுதியான நிதிப் பெறுபேறுகளுடன் ஆரம்பித்துள்ளது. இதனூடாக சிறந்த நிதி வளர்ச்சியை எய்தியுள்ளது. சவால்கள் நிறைந்த சூழலிலும், நிகர செலுத்திய தவணைக்கட்டணங்கள் முதல் வரிக்கு முந்திய இலாபம் மற்றும் மொத்த தேறிய வருமானம் போன்ற பிரதான பிரிவுகளில்  முன்னேற்றத்தை எய்தி சிறப்பான வகையில் வளர்ச்சியை எய்தியிருந்தது. கடந்த ஆண்டில் பதிவாகியிருந்த ரூ. 1 பில்லியனுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டின் உரிமைகோரல்களில் ரூ. 1.4 பில்லியன் பெறுமதியையும் பதிவு செய்திருந்தது.

யூனியன் அஷ்யூரன்ஸ், ஆயுள் நிதியம் தற்போது ரூ. 50 பில்லியனாக அமைந்திருப்பதுடன், நிகர செலுத்திய தவணைக்கட்டணம் 17% வளர்ச்சியை பதிவு செய்து ரூ. 3.4 பில்லியனிலிருந்து ரூ. 4 பில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய செலுத்திய தவணைக்கட்டணம் ரூ. 3.2 பில்லியனிலிருந்து ரூ. 3.8 பில்லியனாக பதிவாகியிருந்தது.

தேறிய வருமானம் ரூ. 4.70 பில்லியனிலிருந்து ரூ. 4.73 பில்லியனாக உயர்ந்திருந்தது. வரிக்கு முந்திய இலாபம் 17% இனால் வளர்ச்சியடைந்து ரூ. 238 மில்லியனிலிருந்து ரூ. 279 மில்லியனாக உயர்ந்திருந்தது. நிறுவனத்தின் வழமையான வியாபார தவணைக் கட்டணங்கள் 17% இனால் உயர்ந்திருந்தது. துறைசார் சராசரி பெறுமதி 10% ஆக  காணப்பட்டது. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் 3ஆம் மாபெரும் புதிய வியாபார உற்பத்தியாளராக பதிவாகியிருந்தது. முன்னைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், பங்காளர்களுக்கு பங்கிலாபங்கள் எனும் வகையில் ரூ. 1.3 பில்லியனை எய்தியிருந்தது.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டின் நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த சாதனை எய்துவதற்கு பங்களிப்பு வழங்கிய அனைத்து அணியினருக்கும் நன்றி. ஆயுள் காப்புறுதி தொழிற்துறையில் முன்னோடியாக அமைந்துள்ளது. முன்னைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், பிரதான நிதி குறிகாட்டிகளில் நாம் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை எய்தியிருந்தோம். எமது வாடிக்கையாளரை மையப்படுத்திய தந்திரோபாயம், சேவைச் சிறப்பு மற்றும் புரட்சிகரமான டிஜிட்டல் ஆற்றல்களினூடாக எம்மால் இந்த சாதனைப் பெறுமதியை எய்த முடிந்திருந்தது.” என்றார்.

கோம்ஸ் தொடர்ந்து தெரிவிக்கையில், “இந்த ஆண்டில் எய்தப்படவுள்ள சிறந்த அம்சங்களுக்கு எடுத்துக்காட்டாக இந்த வினைத்திறன் அமைந்துள்ளது. நிறுவனத்தின் நிபுணத்துவம் மற்றும் புத்தாக்கமான ஈடுபாட்டினூடாக இலங்கையில் பாதுகாப்பான இடைவெளியை பேண முடிந்திருந்தது. எதிர்காலத்தில் நாம் முன்நோக்கி நகரவுள்ள நிலையில், எம்மால் மேலும் சிறந்த மைல்கல் சாதனைகளை எய்தக்கூடியதாக இருக்கும் என்பதுடன், இலங்கையர்களின் கனவுகளுக்கு வலுவூட்டக்கூடியதாக அமைந்துள்ளது.” என்றார்.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிதி அதிகாரி ஆஷா பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “உறுதியான நிதி இருப்புடன், வினைத்திறனான முகாமைத்துவ கட்டமைப்புகள் மற்றும் செயன்முறைகளின் அடிப்படையில், தொடர்ச்சியான வளர்ச்சியை எய்தியிருந்தது. முதல் காலாண்டில் நிறுவனத்தின் இலாபம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20% உயர்வாக பதிவாகி ரூ. 201 மில்லியனிலிருந்து ரூ. 240 மில்லியனாக பதிவாகியிருந்தது. மொத்தசொத்துக்களின் பெறுமதி ரூ. 70 பில்லியனாக உயர்ந்திருந்தது. சந்தை மூலதனவாக்கம் ரூ. 17.9 பில்லியனாக பதிவாகியிருந்தது.

புகழ்பெற்ற ஜோன் கீல்ஸ் குழுமத்தின் அங்கமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. புதிய கால காப்புறுதி அனுபவத்துடன் ஒப்பற்ற சேவைகளைப் பெற்றுக் கொடுத்து புகழ்பெற்றுள்ளது. டிஜிட்டல் மாற்றியமைப்பு மற்றும் பரந்தளவு புத்தாக்கமான தீர்வுகளினூடாக வளர்ந்து வரும் சந்தைத் தேவைகளை நிவர்த்தி செய்கின்றது. இதனூடாக தொழிற்துறையில் மாற்றியமைத்து தீர்வுகளை வழங்குகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .