2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அலியான்ஸ் ஆசிரி ஹெல்த் உடன் கைகோர்ப்பு

S.Sekar   / 2021 செப்டெம்பர் 20 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறுபட்ட கூடுதல் மதிப்புக்கள் மற்றும் நன்மைகளை வழங்குவதற்காக ஆசிரி ஹெல்த் நிறுவனத்துடன் ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.

இந்த கூட்டாண்மை மூலம், அலியான்ஸ் லங்கா காப்புறுதி வாடிக்கையாளர்களுக்கு வைத்தியசாலையில் தங்கும் அறை கட்டணங்கள், ஆய்வுகூட பரிசோதனைகள் மற்றும் பிற நோய் கண்டறிதல் சேவைகள் மீதான தள்ளுபடிகள், மருத்துவமனையிலிருந்து 10 கி.மீ சுற்றுவட்டத்தில் உள்ளவர்கள் வைத்தியசாலைக்குச் சென்று அனுமதிக்கப்படுவதற்கு இலவச அம்புலன்ஸ் வண்டிச் சேவை மற்றும் முதுகெலும்பு மற்றும் முதுகுவலி, இருதயம், மார்பக பராமரிப்பு, நரம்பியல் (மூளை மற்றும் முதுகெலும்பு), பெண் பராமரிப்பு மற்றும் ஆரம்பகால கர்ப்பத்திற்கான மருத்துவ ஆலோசனை உள்ளிட்ட சிகிச்சைகளையும் இலவசமாகப்  பெற்றுக்கொள்ள முடியும்.

நாடு முழுவதும் முக்கிய பிரதேசங்களில் அமைந்துள்ள ஆசிரி குழும மருத்துவமனைகளில் அனைத்து காப்புறுதி வாடிக்கையாளர்களும் இந்த நன்மைகளைப் பெறலாம். மேலும், இந்த கூட்டாண்மை மூலம், மோட்டார் மற்றும் மோட்டார் அல்லாத காப்புறுதி வாடிக்கையாளர்கள் ஆய்வுகூட சோதனை மீதான தள்ளுபடிகள் மற்றும் சில மருத்துவ சிகிச்சைகளுக்கு இலவச / தள்ளுபடி வவுச்சர்கள் மூலம் பயனடையவும் முடியும்.

அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் / பணிப்பாளருமான கானி சுப்பிரமணியம் அவர்கள் இக்கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவிக்கையில், 'அலியான்ஸ் நிறுவனத்தில் நாங்கள் மக்களின் வாழ்க்கையைப் பாதுகாக்க உதவுவதிலும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவை அனுபவத்தை வழங்குவதிலும் அர்ப்பணிப்புடன் உள்ளோம். ஆசிரி ஹெல்த் உடனான இந்த கூட்டாண்மை மூலம், எங்கள் காப்புறுதி வாடிக்கையாளர்களுக்கு புகழ்பெற்ற இந்த மருத்துவமனையின் நன்மதிப்புப்பெற்ற சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்வது மட்டுமன்றி, பிரத்தியேகமயமாக்கப்பட்ட சேவை வழங்கப்படுவதால், ஒவ்வொரு காப்புறுதி வாடிக்கையாளருக்கும்; சிரமங்களற்ற அனுபவம் உறுதி செய்யப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்,' என்று குறிப்பிட்டார்.

'அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்காவுடன் கூட்டுச் சேர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கையின் முன்னணி ஒட்டுமொத்த சுகாதார சேவை வழங்குநராக, நாட்டில் மிகவும் அர்ப்பணிப்பும், திறமையும் மற்றும் அனுபவமும் மிக்க சுகாதாரத்துறை வல்லுநர்களை நாம் கொண்டுள்ளோம். மேலும், எங்கள் நோயாளர்களுக்கு மருத்துவ சேவையில் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை வழங்குவதற்காக நாங்கள் தொடர்ந்து எங்கள் உட்கட்டமைப்பின் மீது முதலீடு செய்து வருகிறோம். எனவே, இந்த கூட்டாண்மை மூலம் அலியன்ஸ் இன்சூரன்ஸ் காப்புறுதி வாடிக்கையாளர்களுக்கு நன்கு பழக்கமாகிவிட்ட உயர் மட்ட சேவையை எங்களால் வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,' என்று ஆசிரி ஹெல்த் குழும தலைமை நிர்வாக அதிகாரியான வைத்தியர் மஞ்சுள கருணாரத்ன கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .