2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கையை ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு உகந்த தேசமாக வலிமைப்படுத்த உடன்படிக்கை கைச்சாத்து

S.Sekar   / 2023 பெப்ரவரி 06 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

Hatch, தொழில்முயற்சியாளர்களுக்காக வளங்களுடன் இணைக்கப்பட்ட சர்வதேச வலையமைப்பு பகுதிகளான Draper Startup House உடன் தந்திரோபாய பங்காண்மையில் கைச்சாத்திட்டுள்ளது. இலங்கைக்காக Draper Startup House உடன் Hatch நோக்கமொன்றை பகிர்ந்து கொண்டுள்ளதுடன், Hatch இன் “Sri Lanka: From Troubled Nation to Startup Nation” எனும் திட்டத்துக்கு ஆதரவளிக்கவும் முன்வந்துள்ளது. தற்போது இலங்கை தொடர்பில் நிலவும் எதிர்மறையாக கருத்துக்களை மாற்றியமைக்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்திருக்கும். நாட்டில் காணப்படும் பெருமளவான எதிர்கால வாய்ப்புகளில் இரு சாராரும் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், உயர் தரமான திறமைசாலிகளை கவர்ந்து தக்க வைத்துக்கு கொள்வதற்கு இந்தப் பங்காண்மையை பயன்படுத்த எதிர்பார்க்கின்றன. அத்துடன் இலங்கையின் ஆரம்பநிலை நிறுவனங்களை சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் செயற்படுத்துநர்களுடன் இணைப்பதற்கும் எதிர்பார்த்துள்ளது.

2018 மார்ச் மாதம் சிங்கப்பூரில், விக்ரம் பாரதி என்பவரால் Draper Startup House என்பது “Tribe Theory” என்பதற்கமைய நிறுவப்பட்டிருந்தது. டிஜிட்டல் சிந்தனைச் செயற்பாட்டாளர்களுக்கு ஓய்வான முறையிலமைந்த வினைத்திறனான பணியிடப்பகுதிகளை அணுகச் செய்வது இந்த ஸ்தாபிப்பின் கொள்கையாக அமைந்திருந்தது. 2019, ஆம் ஆண்டில், Draper கட்டமைப்பில் Tribe Theory இணைந்து கொண்டதுடன், “Draper Startup House,” என மாற்றம் செய்யப்பட்டு “hostel with a twist.” என அழைக்கப்பட்டிருந்தது. இன்று, இந்தப் பகுதிகள் தொழில்முயற்சியாளர்கள், ஆரம்பநிலை அணிகள், வெவ்வேறு பகுதிகளிலிருந்து பணியாற்றுவோர் மற்றும் பரந்தளவு சிந்தனை கொண்ட பிரயாணிகள் ஆகியோரை வரவேற்று, வலுவூட்டி, அவர்களை தொழில்நுட்ப சார் கட்டமைப்பு நிகழ்வுகள், வியாபார சேவைகள், Draper பல்கலைக்கழகம் மற்றும் Draper Venture வலையமைப்பு ஆகியவற்றுடன் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பங்காண்மையின் அங்கமாக, கோடீஸ்வர முதலீட்டாளரான டிம் டிரேபர் இலங்கைக்கு விஜயம் செய்து அரசாங்கம் மற்றும் உள்நாட்டு ஆரம்பநில நிறுவனங்களின் பிரதான பங்காளர்களுடன் தொடர்புகளைப் ஏற்படுத்தியிருந்தார். இந்த விஜயத்தின் போது, ஸ்தாபகர்கள் மற்றும் உள்நாட்டு ஆரம்பநிலை நிறுவனங்களில் கவனம் செலுத்தும் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதுடன், இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் எதிர்கால அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்வார். மேலும், “Meet the Drapers” எனும் தலைப்பில் தொலைக்காட்சித் தொடரையும் பதிவு செய்யவுள்ளார். இதனூடாக, உள்நாட்டு தொழில்முயற்சியாளர்களுக்கு நேரடியாக தமது சிந்தனைகளை டிம் டிரேப்பருடன் பகிர்ந்து கொள்ள முடிவதுடன், அதனூடாக 9 மில்லியன் பார்வையாளர்களுக்கு அதிகமான சர்வதேச வெளிப்படுத்தலைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

டிரேப்பர், குழுநிலை கலந்துரையாடலிலும் பங்கேற்பார். இதில் சோனியா ஹைட்ராமணி மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் கலந்து கொள்வர். இந்த நிகழ்வை நாதன் சிவகணாநாதன் நெறியாள்கை செய்வார். இதனைத் தொடர்ந்து, கேட்போர் மத்தியில் டிம் டிரேப்பர் உரையாற்றவுள்ளார். இந்த குழுநிலை கலந்துரையாடல் “From Troubled Nation to Startup Nation,” எனும் தலைப்பில் அமைந்திருப்பதுடன், ஜீவன் ஞானம் அவர்களால் இந்தத் தொனிப்பொருள் பற்றிய அறிமுகம் வழங்கப்படும்.

Hatch இன் இணை ஸ்தாபரான ஜீவன் ஞானம் கருத்துத் தெரிவிக்கையில், “Hatch இல் எமது நம்பிக்கை என்பது, உறுதியான முறையில் பொருளாதார விருத்தியை மேற்கொள்வது மற்றும், இது போன்ற பங்காண்மைகளை ஏற்படுத்துவதன் மூலமாக, சிலிக்கன் வெலி முதலீட்டாளர்களில் ஒருவரான டிம் டிரேப்பர் போன்றவர்களை இலங்கைக்கு அழைத்து வருக்கூடியதாக அமைந்திருப்பது என்பதாக அமைந்துள்ளது. சர்வதேச வலையமைப்பு ஆலோசகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சக செயற்பாட்டாளர்களுடன் இலங்கையின் தொழில்முயற்சியாளர்களுக்கு கைகோர்த்து இயங்க முடியும் என்பதுடன், அதனூடாக புத்தாக்கம் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட வளர்ச்சியை உலகத் தரம் வாய்ந்த வியாபாரங்களை கட்டியெழுப்பக்கூடியதாக இருக்கும். Hatch ஊடாக இளம் தொழில்முயற்சியாளர்களுக்கு கட்டமைப்பொன்றை உருவாக்குவது எமக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. டிம்மின் விஜயம் மற்றும் இந்தப் பங்காண்மையினூடாக, சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் இலங்கையில் காணப்படும் வாய்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டு, நடுத்தரளவு முதல் நீண்ட கால அடிப்படையிலான பெறுமதிகளை உள்நாட்டிலும், பிராந்திய மட்டத்திலும் சர்வதேச ரீதியிலும் ஈட்டிக் கொள்வதற்கு ஏதுவாக அமைந்திருக்கச் செய்யும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

பொருளாதார வழிநடத்தல், கைகோர்ப்பு மற்றும் புத்தாக்கம் மற்றும் சம வாய்ப்புகளை முன்னெடுத்துச் செல்லல் போன்ற பிரதான நம்பிக்கைகளினூடாக, Hatch ஐச் சேர்ந்த அணியினர் கடந்த காலங்களாக வழிநடத்தப்படுவதுடன், அதனூடாக ஆரம்பநிலை சமூகம், இன்கியுபேற்றர்கள், துரிதப்படுத்துநர்கள், மூலதன அணுகல் மற்றும் ஆரம்பநிலை சமூகத்துக்கான வழிகாட்டல்கள் போன்றன Hatch திட்டத்தினூடாக ஊக்குவிக்கப்படுகின்றன. 28 ஆரம்பநிலை நிறுவனங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட Hatch, தற்போது 500 ஆரம்பநிலை நிறுவனங்களைக் கொண்டதாக வளர்ச்சி கண்டுள்ளதுடன், நான்காண்டு காலப்பகுதியில் 60,000 சதுர அடி உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டதாக விரிவடைந்துள்ளது. Hatch இனால் உள்வைக்கப்பட்ட 37% ஆன ஆரம்பநிலை நிறுவனங்கள் ஆரம்பநிலை நிகழ்ச்சித் திட்டங்களினூடாக துரிதப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதில் 33% ஆனவை பெண்கள் தலைமையிலமைந்த ஆரம்ப நிலை நிறுவனங்களாகும். எதிர்வரும் ஆண்டுகளில், நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட புத்தாக்குநர்களால் வழிநடத்தப்படும் பொருளாதார வலுவூட்டலை Hatch எதிர்பார்ப்பதுடன், இதற்கு இலங்கையில் ஆரம்பநிலை நிறுவனக் கட்டமைப்பின் ஆதரவு கிடைக்குமெனவும் எதிர்பார்த்துள்ளது.

இலங்கையின் ஆரம்பநிலை கட்டமைப்பின் முக்கியத்துவம் பெறும் அங்கங்களாக அதன் அமைவிடம் மற்றும் வணிக வாய்ப்புகள் போன்றன அமைந்துள்ளன. சர்வதேச பங்காளர் குழுக்களிடையே பெறுமதி சேர்ப்பை எய்துவதற்கு Hatch வெற்றிகரமாக பங்களித்துள்ளது. மேலும், டிம் டிரேப்பர் தமது விஜயத்தின் போது, கொழும்பில் Hatch X Draper Startup House ஐ உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பார். இலங்கையின் ஆரம்பநிலை வியாபார உட்கட்டமைப்புகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இணைந்த வாழிடப் பகுதியாக இது அமைந்திருக்கும். இந்தத் திட்டத்தினூடாக, டிஜிட்டல் ஆரம்பநிலை செயற்பாட்டாளர்களுக்கான சிறந்த பகுதியாக இலங்கையை நிலைநிறுத்த Hatch எதிர்பார்ப்பதுடன், இணைப்பு, உற்சாகமூட்டல் மற்றும் வெற்றிகரமான வியாபாரங்களைக் கட்டியெழுப்பல் போன்றவற்றினூடாக தந்திரோபாய கட்டமைப்பை எய்த எதிர்பார்க்கின்றது.

Hatch இன் இணை ஸ்தாபகர் நாதன் சிவகணாநாதன் கருத்துத் தெரிவிக்கையில், “வரலாற்றில் இலங்கை மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், மீட்சிகரமான பொருளாதாரத்தின் முதுகெலும்பான ஆரம்பநிலை நிறுவனங்கள் திகழ வேண்டியதன் முக்கியத்துவம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உள்நாட்டு ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்கு Hatch சிறந்த வகையில் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. உள்நாட்டு ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு அர்த்தமுள்ள பெறுமதியை உருவாக்குவதற்கான எமது ஆற்றல் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், இலங்கையின் பயணத்தை ஆரம்பநிலை வியாபாரங்களின் தேசமாக கட்டியெழுப்பிக் கொள்ள உதவிகளை Hatch வழங்கும். Draper Startup House உடனான பங்காண்மை மற்றும் இலங்கைக்கு டிம்மின் விஜயம் போன்றன ஆரம்ப படிமுறைகளாக அமைந்திருப்பதுடன், ஆரம்பநிலை தேசமாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கான அடித்தளமாக அமைந்திருக்கும்.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X