2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அந்நியச் செலாவணி கையிருப்பை தக்க வைக்க வெளிநாட்டுக் கடன்களை நாடும் இலங்கை

S.Sekar   / 2021 செப்டெம்பர் 03 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் போதியளவு அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாத நிலையில், அந்நியச் செலாவணி கையிருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கு வெளிநாட்டுக் கடன்களை எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

அமெரிக்க டொலர், யூரோ, ரென்மின்பி அல்லது ஜப்பானிய யென் போன்றவற்றில் இந்த தவணைக் கடன் வசதியை எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. ஆகக் குறைந்தது ஒரு வருட காலப்பகுதிக்கு இந்த கடன் வசதி வழங்கப்பட வேண்டும் என்பதுடன், 50 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு நிகரானதாக அமைந்திருக்க வேண்டும். இந்த கோரலுக்கான மனுக்கள் செப்டெம்பர் 22ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் அறிவித்துள்ளது.

ஜுலை மாத இறுதியில் நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பு 2.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்தது. இந்நிலையில் கடந்த வாரம் பங்களாதேஷிடமிருந்து 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை மாற்றீட்டு கடனாகவும், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 780 மில்லியன் அமெரிக்க டொலர்களை விசேட உரிமை வழங்கல் ஒதுக்கீடாகவும் பெற்றுக் கொண்டது.

இந்நிலையில் நாட்டின் பிணைமுறி ஏல விற்பனைகளில் போதியளவு கேள்வி இன்மையையும் அவதானிக்க முடிந்தது. இதனால் அந்நியச் செலாவணி இருப்பு மேலும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .