2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

சிரேஷ்ட பிரஜைகளுக்கு “செலான் ஹரசர” கணக்கு மீள அறிமுகம்

S.Sekar   / 2021 மே 24 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரேஷ்ட பிரஜைகளுக்கும், ஓய்வூதியம் பெறுவோருக்கும் விசேட அனுகூலங்கள் மற்றும் நிதியியல் தீர்வுகளை வழங்கும் கணக்கான “செலான் ஹரசர” கணக்கை புதிய அம்சங்களுடன் மீள அறிமுகம் செய்யதுள்ளது.

சிரேஷ்ட பிரஜைகளுக்கு காணப்பட வேண்டிய நிதிச் சுதந்திரம் மற்றும் உறுதித் தன்மையை புரிந்து கொண்டு சமூகத்தில் அவர்கள் ஆற்றும் முக்கியமான பங்களிப்பை கவனத்தில் கொண்டும், செலான் வங்கி தனது ஹரசர கணக்கை பல பெறுமதி சேர்க்கப்பட்ட அம்சங்கள் மற்றும் சேவைகளுடன் மீள அறிமுகம் செய்துள்ளது. செலான் ஹரசர என்பது ஒரு சாதாரண சேமிப்புக் கணக்கைவிட சிறந்ததாகவும், நபர் ஒருவர் ஓய்வு பெறும் வயதை எய்தியதும், நிதிச் சுதந்திரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவச் செலவுகள் பெருமளவில் அதிகரித்துக் காணப்படுகின்றன. இது பல சிரேஷ்ட பிரஜைகளுக்கு பெரும் சுமையாக அமைந்துள்ளது. செலான் ஹரசர சிரேஷ்ட பிரஜைகள் கணக்கினூடாக, அவர்களுக்கு ஏற்படும் பொதுச் சத்திர சிகிச்சைகளுக்கான ரூ. 200,000 வரையான செலவை மீளப் பெற முடியும் என்பதுடன், வில்லைகள் மற்றும் விழிவெண்படல சீராக்க சத்திரசிகிச்சைக்கான சாதனங்களுக்கு ஏற்படும் செலவுகளை மீளப் பெற முடியும். மேலும், இலவசமாக வருடாந்த மருத்துவ வெகுமதிகளையும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். செலான் ஹாரசார டெபிட் அட்டையினூடாக கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு, தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ ஆய்வுகூடங்களில் 20 சதவீதம் வரை, மூக்குக் கண்ணாடி விற்பனை நிலையங்களிலிருந்து 25 சதவீதம் வரை, புத்தக விற்பனை நிலையங்களிலிருந்து 15 சதவீதம் மற்றும் ஒன்லைன் பார்மசிகளில் 10 சதவீதம் வரை பிரத்தியேகமான விலைக்கழிவுகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஹாரசார கணக்குதாரர்களுக்கு நாடு முழுவதையும் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட விற்பனை நிலையங்களிலிருந்து கவர்ச்சிகரமான விலைக்கழிவுகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.

மேற்படி சலுகைகளுக்கு மேலதிகமாக, ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ. 5 மில்லியன் வரை விசேட வட்டி வீதங்களில் ஓய்வூதியக் கடன்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தமது ஓய்வூதியத்தை செலான் வங்கிக்கு மாற்றும் வாடிக்கையாளர்களுக்கு அன்பளிப்பாக ரூ. 5000 வரை பாவனைக் கட்டணப்பட்டியல் கொடுப்பனவுகளுக்கான மீளளிப்புகளும் வழங்கப்படும். ஹாரசார கணக்குதாரர்கள் தமது 60 வயது பூர்த்தியை கொண்டாடும் போது செலான் வங்கியிடமிருந்து விசேட வெகுமதியையும் பெற்றுக் கொள்வார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .