2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சர்வதேச நாணய நிதிய உதவி இப்போதைக்கு தேவையில்லை

S.Sekar   / 2021 செப்டெம்பர் 06 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு எதிர்கொண்டுள்ள அந்நியச் செலாவணி மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை இப்போதைக்கு நாட வேண்டிய தேவை இல்லை என நிதி, மூலதனச் சந்தைகள் மற்றும் பொது வர்த்தகங்கள் மீளமைப்பு அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

தற்போதைய சூழலில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை நாட வேண்டிய அவசியமில்லை. எமது திட்டங்கள் மற்றும் புதிய முன்னெடுப்புகளினூடாக, இலங்கை சர்வதேச அமைப்புகளிடமிருந்தும் நாடுகளிடமிருந்தும் பெற்றுக் கொண்ட கடன்களை மீளச் செலுத்த முடியாத நிலையை எதிர்கொள்ளாது என்பதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டிய தேவை இல்லை எனவும் குறிப்பிட்டார்.

தொடர்ச்சியாக இலங்கை தனது கடன் மீளச் செலுத்தல்களை பேணி வந்துள்ளது. எதிர்காலத்திலும் செலுத்தப்பட வேண்டியுள்ள கடன்களை மீளச் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.

எதிர்கட்சியினரின் கோரிக்கையான, நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு காணப்படும் ஒரே வழி சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை நாடுவது என தெரிவிக்கப்பட்டிருந்தமைக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் கப்ரால் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .