2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கை வங்கி ரூ. 53 பில்லியன் மதிப்பை பதிவு

S.Sekar   / 2021 ஜூன் 07 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வங்கி, 53 பில்லியன் ரூபாய் வியாபார மதிப்பினை பதிவு செய்துள்ளது. தொடர்ந்து 13 ஆண்டு காலமாக நாட்டின் முதற்தர வியாபார நாமமாக முன்னிலை வகிப்பதன் மூலம் இச்சாதனையை இலங்கை வங்கி எய்துள்ளது.

இலங்கையின் வங்கியின் தலைவர் காஞ்சன ரத்வத்த கருத்துத் தெரிவிக்கையில், 'இலங்கையின் சமூகப் பொருளாதார சரிவினை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் முன்முயற்சிகளுடன் தன்னை இணைத்துக் கொண்ட வங்கியானது 'சௌபாக்யா' தொழிற்படு மூலதனக் கடன் திட்டத்தின் கீழ் 39.1 பில்லியன் ரூபாய் பெறுமதியான 18,589 வசதிகளுடன் அதியுயர்ந்த கடன் வழங்கலைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் 589.4 பில்லியன் ரூபாயிற்கும் அதிகமான கடன் தவணைத் தள்ளுபடி வசதிகளையும் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ஆரோக்கியமான முடிவுகளைப் பதிவுசெய்து நாம் 2020ஆம் ஆண்டிலே 23.6 பில்லியன் ரூபாய் (PBT) உயர் பெறுமதியிலான தொழிற்துறை இலாபத்தினையும் அடைந்துள்ளோம். அதே ஆண்டில் வங்கியினது உள்வருகையானது 2.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவானது. புத்தாக்கத்தின் ஊடாக முன்னோக்கிச் செல்வதனையும் எப்போதும் மக்களின் விருப்பங்களைப் பற்றிய தீவிரப் புரிதலை கொண்டிருக்கவும் நாம் விரும்புகின்றோம். புதுப்பிக்கப்பட்ட நோக்கத்துடன் பொருளாதாரச் சரிவினை நாம் எதிர்கொண்டதுடன் இவ்வாறனதோர் சவாலான நேரத்தில் நாடு முழுவதிலுமுள்ள ஆயிரக்கணக்கான தனிநபர்கள் மற்றும் வணிகங்களை தக்கவைப்பதற்கான மூலோபாயங்களையும் எம்மால் வழங்க முடிந்தது. புத்தாக்கமான மனிதவளம் மற்றும் தகவல் தொழில்நுட்ப தீர்வுகளுடன் வாடிக்கையாளர் சேவையினை வழங்குவதற்கான புதிய வழிகளை ஆராய்வதற்கான எமது முயற்சிகள் பலனளித்துள்ளன'.

வங்கி பல்வேறுவகையான நெறிப்படுத்தல்களையும் பன்முகப்படுத்தப்பட்ட இயல்பினையும் கொண்டிருப்பதால் வௌ;வேறுவிதமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் ஊடாக தனது வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றியுள்ளது.

இலங்கை வங்கியின் பொது முகாமையாளர் டீ.பீ.கே குணசேகர கருத்துத் தெரிவிக்கையில். 'எமது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கும் சக ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் அதேநேரத்தில் இத்தொற்று நிலைமையானது அனைத்து வியாபார நாமங்களுக்கும் ஒரு சோதனையாக மாறியுள்ளதுடன் இது வியாபார நாமங்களினது பெறுமதியினை அதிகரிக்கும் உள்ளார்ந்த வலிமையினை வெளிப்படுத்திய தருணம் என்பதனை நான் நினைவூட்ட விரும்புகின்றேன். தனிநபர்களுக்கும் வணிகங்களுக்கும் இலங்கை வங்கியோர் பங்காளராக செயலாற்றி நம்பகத்தன்மையினை நிலைநிறுத்தியுள்ளமை இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. உறுதிமிக்க அந்நம்பகத்தன்மையினை தொடர்ந்தும் பேணுவதற்கான இயலுமையானது நிலைத்தன்மையான வளர்ச்சியிலும் நிதி ஆற்றலின் விரிவாக்கம், செயற்பாட்டுத் திறன், டிஜிற்றல் மற்றும் தொழில்நுட்ப தழுவலின் விஸ்தரிப்பு மற்றும் அதன் மூலோபாய அணுகுமுறையுடன் சூழ்நிலைக்கேற்ப பதிலளிக்கக்கூடிய தன்மை ஆகியவற்றில் வங்கி வெளிப்படுத்திய ஸ்திரத்தன்மையினாலேயே சாத்தியமாகியுள்ளது'.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X