2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'செயலாளரது அழைப்பை ஏற்கப்போவதில்லை'

Freelancer   / 2021 ஓகஸ்ட் 01 , பி.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்வியமைச்சின் செயலாளரது அறிவிப்பு ஏற்கப்படாமையால், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் நாளையதினம் பாடசாலைக்கு சமுகமளிக்க மாட்டார்கள் என்று ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கம், கல்வியமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு காணாமல் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை வேலை செய்ய விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்களின் தலைவர்களால் கல்வியமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
நாளை முதல் வழக்கம் போல் நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களும் கடமைக்கு வர வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேராவால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மாகாண, வலய மற்றும் கோட்டக் கல்வி அலுவலகங்களின் அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், நாளை முதல் வழமை போல கடமைக்குத் திரும்ப வேண்டும் என்று கல்வியமைச்சின் செயலாளர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X