2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நெஸ்லே நிறுவனத்துக்கு நான்கு விருதுகள்

S.Sekar   / 2021 நவம்பர் 29 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெஸ்லே லங்கா நிறுவனம் 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த நிலைபேண்தகைமை பேணும் நிறுவனத்திற்கான விருதுகளில் நான்கு விருதுகளைத் தனதாக்கியுள்ளது.

பூமி என்ற பிரிவின் கீழ் பூமிக்கு நன்மை செய்வதில் அதன் வலுவான முயற்சிகளுக்கு கிடைத்துள்ள அங்கீகாரமாக, சுற்றுச்சூழல் மீது நிறுவனத்தின் அர்ப்பணிப்பு, வணிகத்திற்கு அப்பாற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் நிலைபேண்தகைமைக்காக சமூகம்-பூமி-இலாபம் ஆகியவற்றில் சிறந்த மும்முனைப் பெறுபேறுகளுக்கான விருது ஆகிய பிரிவுகளில் வென்றுள்ளது.

2021 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் சிறந்த 10 நிறுவனங்களில் ஒன்று என்ற விருதையும் நெஸ்லே லங்கா நிறுவனம் பெற்றுள்ளது. இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்ற இந்த மதிப்புமிக்க வருடாந்த நிகழ்வானது, மக்கள், பூமி மற்றும் இலாபம் ஆகிய மும்முனை இலக்குடனான செயற்திறனை அடைவதில் நிறுவனத்தின் முயற்சிகளுக்காக நிலைபேண்தகைமையில் முன்னின்று செயற்படும் நிறுவனங்களை அங்கீகரிக்கிறது.

நல்லுணவு, நல்வாழ்வுக்கான நிறுவனம் நாட்டின் முதல் 10 சிறந்த வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் அங்கீகரிக்கப்படுகின்றமை தற்போது ஏழாவது ஆண்டாகும். நெஸ்லே நிறுவனம் இலங்கையின் சிறந்த நிறுவனமாக இரண்டு முறை முடிசூடியுள்ளதுடன், நாட்டிற்கு ஆற்றி வருகின்ற நேர்மறையான பங்களிப்பிற்கான இனங்காணல் அங்கீகாரமாக, சமூக உறவுகள், பணியாளர்கள் உறவுகள், வாடிக்கையாளர் உறவுகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய இந்த மதிப்புமிக்க நிகழ்வில் கடந்த காலங்களில் தொடர்புடைய பிரிவு, துறை மற்றும் சிறப்பு செயற்திட்டங்களுக்கான 18 விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த நிலைபேண்தகைமை பேணும் நிறுவனத்திற்கான விருதுகள் இலங்கையின் மிக உயர்ந்த நிறுவனரீதியான கௌரவமாக பரவலாகக் கருதப்படுகிறது. இது உள்நாட்டு பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்கு சிறந்த வகையில் பங்களிப்பாற்றுகின்றவர்களையும், நிறுவன நிலைபேண்தகைமையில் சிறந்த செயல்திறன் கொண்டவர்களையும் அங்கீகரிக்கிறது. இதற்கான நுழைவு விண்ணப்பங்கள் உள்நாட்டு வல்லுநர்கள், கல்விமான்கள் மற்றும் சிந்தனைத் தலைவர்களைக் கொண்ட மிகவும் மரியாதைக்குரிய நடுவர் அணியால் மதிப்பீடு செய்யப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .