2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

2 வெளிநாட்டவருக்கு இலங்கையில் ​கொரோனா

Editorial   / 2021 ஜூன் 01 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் வெளிநாட்டவர்களில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலகட்டத்தில் பெறப்பட்ட பி.சி.ஆர் சோதனை முடிவுகளில் இரு வெளிநாட்டவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பதுடன் அது சாதகமாக இருப்பது கண்டறியப்பட்டது. அவ்விரு வெளிநாட்டவரின் விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை.

சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவதற்காக அதன் எல்லைகளை இன்று (01) மீண்டும் திறக்கப்பட்டன. இந்த நிலையில், வெளிநாட்டவர்கள் இருவருக்கு கொரோனா தொற்றியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மே 21 முதல் மே 31 நள்ளிரவு வரை சர்வதேச விமானங்களை இலங்கை தற்காலிகமாக நிறுத்திய பின்னர் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், இந்தியாவில் இருந்து விமானங்கள் நிறுத்தி வைக்கப்படும் என்று அரசாங்கம் கூறியது. வியட்நாமில் இருந்து வரும் பயணிகளுக்கும் நேற்று (திங்கட்கிழமை) முதல் இலங்கை தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து விமான நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், ஜெனரல் கேப்டன் தெமியா அபேவிக்ரம தெரிவித்தார்.

வியட்நாமில் இருந்து இலங்கைக்கு செல்வதற்கும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் திரிபடைந்திருக்கும் கொரோனா மாறியை, அண்மையில் கண்டறிந்ததாக வியட்நாம் அறிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை வந்துள்ளது.

இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிக்கும்  ஒரு பயணி மீது இந்தியாவின் மாறியை இலங்கை இதுவரை கண்டறிந்துள்ளது.

எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட நபரின் ஆரம்பகால கண்டறிதல் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சையின் காரணமாக இந்த மாறுபாடு சமூகத்திற்குள் நுழையவில்லை என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .