2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘Data Rollover’ஐ வசதிகளை வழங்கும் Airtel

S.Sekar   / 2021 செப்டெம்பர் 14 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எயார்டெல் லங்காவின் 4G சேவை மற்றும் Freedom Packs அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நிறுவனம் தனது முதல் Freedom Postpaid திட்டங்களுக்கான தனித்துவமான ‘Data Rollover’ அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அறிமுகத்தின் மூலம், வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படாத அனைத்து டேட்டாவையும் அடுத்த பில் செலுத்தும் வரை பயன்படுத்த வாய்ப்பளித்துள்ளது.

தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் Postpaid வாடிக்கையாளர்களிடம் தவணை கட்டணம் அறவிடுவது தற்போது ஒவ்வொரு கட்டண காலத்தின் முடிவிலும் ஒரு புதிய Data Rollover ஒதுக்கீட்டை செய்து மற்றும் கடந்த கட்டண காலத்தின் போது பயன்படுத்தப்படாத அனைத்து டேட்டாவையும் ரத்து செய்கிறது. இப்போது வரை, Postpaid வாடிக்கையாளர்கள் தாங்கள் செலுத்திய இந்த கடந்த கால டேட்டாவை பயன்படுத்தி கொள்ள வேறு வழியில்லை மற்றும் ‘Data Rollover’ வசதிகள் இப்போது அந்த வாய்ப்பை வழங்குகிறது. அதுபோல, ‘Data Rollover’ வசதி, எயார்டெல் நிறுவனத்தை எளிமையான மற்றும் சிறந்த மதிப்பு கூட்டப்பட்ட வலையமைப்பு அனுபவமாக மாற்றுவது மட்டுமல்லாமல், முழுத் துறையிலும் வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட அணுகுமுறையுடன் வாடிக்கையாளருக்கு அதிகாரம் அளிப்பதற்காக இலங்கையில் தொலைபேசி தொலைத் தொடர்புக்கான ஒரு புத்தாக்கம் கொண்ட அணுகுமுறையையும் உருவாக்கும் முதலாவது நிகழ்வு இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

Postpaid வாடிக்கையாளர்கள் அடுத்த மாதம் தங்கள் மீதமுள்ள டேட்டா 200 GB வரை கொண்டு சென்று புதிய மாத நன்மையாகப் பயன்படுத்தலாம். இந்த புதிய அம்சம் Postpaid வாடிக்கையாளர்கள் டேட்டா காலாவதி மற்றும் அவர்கள் ஏற்கனவே பணம் செலுத்திய டேட்டா வீணாவதை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்பதை உறுதி செய்கிறது. இந்த ‘Rollover’ அம்சமான புதிய Freedom Postpaid திட்டங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிற வசதிகளுடன் இயல்பாக கிடைக்கும்.

இந்த அம்சம் மாதந்தோறும் பயன்படுத்தப்படாத டேட்டா இழப்பதைத் தடுக்கிறது, இதனால் வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படாத டேட்டாக்களுக்கு பணம் செலவழிக்க வேண்டியதில்லை. குறிப்பாக ஒவ்வொரு மாதமும் மாறுபடும் டேட்டா தேவைகள் உள்ளவர்களுக்கு, இந்த Data Rollover வசதி மிகவும் நன்மை பயக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .