2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘Fibre of the Nation’ அறிமுகம்

S.Sekar   / 2021 செப்டெம்பர் 10 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL, இந்த புதிய கட்டமைப்புக்கு உகந்த வகையில் முதலாவதும், வேகமானதும் பரந்த உயர்தர ஃபைபர் இணைப்பை நாட்டின் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஏற்படுத்திக் கொடுப்பதுடன், டிஜிட்டல் உள்ளடக்கமான இலங்கையை நோக்கி பயணிப்பதற்கு அவசியமான மதிநுட்பமான வாழ்க்கை முறைகளுக்கு வலுவூட்ட முன்வந்துள்ளது.

புரட்சிகரமான தொழில்நுட்பம், இணைப்பு, மதிநுட்பமான வலையமைப்பு மற்றும் மதிநுட்பமான சாதனங்கள் போன்றன பயன்படுத்தப்படும் காலப்பகுதியில், நாட்டின் அபிவிருத்தி, புத்தாக்கம் மற்றும் வேகமான ஒப்டிகல் தொழில்நுட்பம் போன்றன டிஜிட்டல் கட்டமைப்பை முன்னெடுத்துச் செல்வதற்கு அத்தியாவசியமானவையாக அமைந்துள்ளன. குடிமக்கள், வியாபாரசார் வாடிக்கையாளர்கள், சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்கள் மற்றும் ஆரம்பநிலை நிறுவனங்கள் போன்ற சகல தரப்பினருக்கும் புதிய உயர்நிலையை எய்துவதற்கும், நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கும், இலங்கையின் நலனை மேம்படுத்துவதற்கும் ஏதுவாக அமைந்திருக்கும்.

பிரத்தியேகமான இணைப்புகளில், முனைவுடனான-முனைவு ஃபைபர் இணைப்புத் தீர்வுகளை இலங்கையில் வழங்கும் ஒரே நிறுவனமாக SLT-MOBITEL திகழ்கின்றது. Internet of Things (IOT), Smart home, Ultra HD TV, Gaming மற்றும் இதர அசல்நேர அப்ளிகேஷன்களை கொண்டுள்ள SLT-MOBITEL இனால் 100 mbps முதல் 1000 mbps வரை உயர் அலைக்கட்டமைப்பு கேள்விகளுக்கு சேவைகள் வழங்கப்படுகின்றன.

அதியுயர் வேகங்களுடன், SLT-Mobitel Fibre ஃபைபர் என்பது உள்நாட்டு தொலைத்தொடர்பாடல் சந்தையில் கிடைக்கும் வேகமான மற்றும் தொடர்ச்சியான வலையமைப்பாக அமைந்திருப்பதுடன், நேரடி சர்வதேச இணைப்பை உறுதி செய்யும் வகையில் குறைந்த latency ஐ உறுதி செய்யும் வகையில் 84 சர்வதேச கடலுக்கடியிலான கேபள்களை கொண்டுள்ளது. SLT-Mobitel ஃபைபர் ஊடாக, வாடிக்கையாளர்களுக்கு தமது வாழ்க்கையின் சகல அம்சங்களையும் ஒன்றிணைக்க முடியும் என்பதுடன், தமது பணியிடங்கள் முதல் வீடுகள் மற்றும் அவற்றுக்கு அப்பாலும் சகல டிஜிட்டல் தொழில்நுட்பசார் தேவைகளையும் நிவர்த்தி செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X