2024 மார்ச் 28, வியாழக்கிழமை

SLT-MOBITEL இணைப்புத்திறன் மற்றும் கொள்ளளவுத் திறன் ஆகியவற்றை துரிதமாக மேம்படுத்தல்

S.Sekar   / 2021 ஜூன் 28 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL, நாடளாவிய ரீதியில் அதிகரித்துள்ள டேட்டா பாவனை கேள்வி அதிகரிப்பை நிவர்த்தி செய்யும் வகையில் தனது சேவை வழங்கலை துரிதமாக மேம்படுத்தியுள்ளது. குறிப்பாக தொற்றுப் பரவல் ஆரம்பித்தது முதல் நாட்டின் டேட்டா பாவனை இரட்டிப்பாக அதிகரித்துள்ள நிலையில், இந்த மேலதிக கேள்வியை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த விஸ்தரிப்பு மற்றும் மேம்படுத்தும் நடவடிக்கைகளை SLT-MOBITEL முன்னெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக வருடாந்தம் 25 பில்லியன் ரூபாய்க்கு அதிகமான தொகை உட்கட்டமைப்பு அபிவிருத்தி பணிகளுக்காக முதலீடு செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளதுடன், குறிப்பாக “Fiber To The Home (FTTH)” அதிவேக புரோட்பான்ட் வலையமைப்புகள் மற்றும் 4G LTE Mobile BTS விரிவாக்கங்கள் போன்றவற்றுக்காக இந்தத் தொகை செலவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு முடக்கத்தின் போதும், அதிகரித்துச் செல்லும் வாடிக்கையாளர்களின் கேள்வியில் சராசரியாக 30% ஐ நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்திருந்ததுடன், கொள்ளளவு, வேகம் மற்றும் இணையப் பாவனையாளர்களின் bandwidth ஆகியவற்றை மேம்படுத்துவதிலும் பயன்படுத்தப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டில் நாடு முழுவதிலும் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக தொடர்ச்சியாக முடக்க நிலை அமுலில் இருந்ததால் வியாபாரங்கள், கல்வி மற்றும் சமூகத் தொடர்புகள் போன்ற அனைத்தும் இணையத்தில் தங்கியிருந்தன. தொலைத் தொடர்பாடல் துறைக்கு இது மாபெரும் சவாலாக அமைந்திருந்ததுடன், இணைப்புத் திறனுக்கான கேள்வியும் அதிகரித்திருந்தது. இதனால் ஏற்கனவே காணப்படும் திறன்கள் மற்றும் கொள்ளளவுகள் போன்றவற்றை விஞ்சியிருந்தது.

அதிகரித்த கேள்வியின் காரணமாக, SLT-MOBITEL மற்றும் 10000 அதன் அர்ப்பணிப்பான ஊழியர்கள் அத்தியாவசிய சேவை வழங்குநராக இயங்கி, தேசத்தின் இணைப்புத்திறன் தேவைகளை நிறைவேற்றும் பணிகளை முன்னெடுத்திருந்தது. மேலும், அதிகரித்திருந்த கேள்வியை நிவர்த்தி செய்வதற்கு புத்தாக்கமான தீர்வுகளையும் அறிமுகம் செய்திருந்தது.

இல்லம் மற்றும் மொபைல் இணைப்புத்திறன்

முன்னணி fibre-optic மற்றும் ADSL புரோட்பான்ட் வலையமைப்புகளினூடாக, SLT-MOBITEL இனால் தடங்கலில்லாத இணைப்புத்திறன் வசதிகள் இலங்கையின் இல்லங்களுக்கு வழங்கப்பட்டதுடன், பயணக் கட்டுப்பாடுகள் காணப்பட்ட காலப்பகுதியில், அவர்களுக்கு தமது பணிகள், கல்வி மற்றும் களிப்பூட்டும் பொழுது போக்கு அம்சங்கள் போன்றவற்றை தொடர்ச்சியாக முன்னெடுக்க முடிந்தது. அதிகரித்துச் செல்லும் கேள்வியை நிவர்த்தி செய்யும் வகையில் விரிவாக்கல் நடவடிக்கைகளுக்காக நிறுவனம் தொடர்ந்தும் தனது முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 95% ஆனவர்கள் SLT-MOBITEL இன் மொபைல் வலையமைப்பினால் இணைக்கப்பட்டுள்ள நிலையில், சவால்கள் நிறைந்த பகுதிகளில் வதிவோரையும் இணைத்துக் கொள்ளும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.

குறைந்த வலையமைப்பு காணப்படும் பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு புத்தாக்கமான தீர்வுகளையும் தற்காலிகமாக SLT-MOBITEL ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் router இல் வலையமைப்பை அலைகளை அதிகளவில் பெற்றுக் கொள்வதை உறுதி செய்ய வெளியக அன்டனா ஒன்று பயன்படுத்துவது அடங்கியுள்ளது.

பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் சிறுவர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், SLT-MOBITEL இனால் குறைந்த செலவில் டேட்டா தீர்வுகள் ஒன்லைன் பயிலல்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.  அரசாங்கத்தினால் வழங்கப்படும் e-பயிலல் கட்டமைப்புகளை இலவசமாக அணுகுவதற்கான வாய்ப்புகளையும் நிறுவனம் வழங்குகின்றது. குறிப்பாக SLT-MOBITEL இன் PEO TV மற்றும் PEO TV GO ஊடாக “Videsa TV” அடங்கலாக கல்வி நாளிகைகளை வழங்குகின்றது.

தேசிய நிகழ்ச்சிகள்

டிஜிட்டல் உள்ளார்ந்த மற்றும் சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்புவதில் SLT-MOBITEL முக்கிய பங்களிப்பை வழங்குவதுடன், நவீன சாதனங்கள், கட்டமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கான வசதியை வழங்குகின்றது.

இந்த முயற்சியின் பங்காளராக கமட்ட சன்னிவேதனய மற்றும் கம சமக பிலிசந்தரக் ஆகிய தேசிய நிகழ்ச்சிகளில் நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் இணைப்புத்திறனை ஏற்படுத்திக் கொடுத்து முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது.

நீண்ட கால அடிப்படையில் வலையமைப்பு சேவைகளை பெற்றுக் கொடுப்பதில் பல்வேறு அனுமதிகள் பெறப்பட வேண்டியுள்ளதுடன், கோபுரங்கள் நிர்மாணம் மற்றும் சாதனங்கள் இறக்குமதி போன்றன மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. இந்நிலையில் இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுடன் SLT-MOBITEL இணைந்து பணியாற்றி, புதிய கோபுரங்களை நிர்மாணிக்கும் பணிகளை மேற்கொள்கின்றது. இதனூடாக, குறைந்த இணைப்புதிறன் காணப்படும் பகுதிகளில் வலையமைப்புத்திறனை மேம்படுத்தியுள்ளது. இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் அதன் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்படும் ஆதரவின் உதவியுடன் இந்த முன்னேற்றங்களை எய்தக்கூடியதாக இருந்தது.

சமூக பராமரிப்பு

கொவிட்-19 நிதியத்துக்காக 50 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான தொகையை SLT-MOBITEL இது வரையில் பங்களிப்புச் செய்துள்ளது. மேலும், கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு எதிரான பணிகளை முன்னெடுப்பதற்காக சுகாதாரத் துறைக்காக அமைச்சு மருத்துவ சாதனங்களை தொடர்ந்து வழங்கி வருகின்றது.

கொவிட்-19 வக்சீனேற்றங்களை கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் முறையாக முன்னெடுப்பதற்கு உதவும் வகையில் eChannelling ஐ பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளும் வசதியை SLT-MOBITEL வழங்கியிருந்தது.

பொது மக்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு 1 மில்லியனுக்கு அதிகமான முகக் கவசங்களை நிறுவனம் பகிர்ந்துள்ளது. கொவிட்-19 மற்றும் அண்மைய வெள்ள அனர்த்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உலர் உணவுப் பொருட்களையும் விநியோகித்திருந்தது.

எதிர்கால அர்ப்பணிப்பு

உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் தற்போது முதலீடுகள் மேற்கொள்ளப்படும் நிலையில், பரிபூரண டிஜிட்டல் சேவை வழங்குநராக SLT-MOBITEL இனால் தொடர்ச்சியாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சர்வதேச புத்தாக்க மையமாக இலங்கையை திகழச் செய்யும் பகிரப்பட்ட தேசிய நோக்கத்தை நிறைவேற்ற பங்களிப்பு வழங்குவதில் நிறுவனம் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதுடன், நபர்களுக்கிடையே மாத்திரமன்றி, உலகத்துடனும் இணைப்புகளை ஏற்படுத்திய வண்ணமுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X