2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

SLT-MOBITEL இனால் மீரிகமவில் மர நடுகை மற்றும் புத்தக நன்கொடைத் திட்டங்கள் முன்னெடுப்பு

S.Sekar   / 2023 மார்ச் 06 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளம் சந்ததியினரின் அறிவு விருத்திக்கு பங்களிப்பு வழங்குவது, சூழலைப் பாதுகாப்பது மற்றும் அனைவருக்கும் பாதுகாப்பான இலங்கையை கட்டியெழுப்புவது போன்றவற்றுக்கான தனது அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில், SLT-MOBITEL தனது சூழல்சார் சமூக ஆளுகை (ESG) நிகழ்ச்சித் திட்டத்தை புத்தாண்டிலும் முன்னெடுத்திருந்தது. அதற்கமைய, மீரிகம, தவலம்பிட்டிய மகா வித்தியாலயத்தில் புத்தகங்கள் நன்கொடை மற்றும் இலுப்பை மர நடுகைத் திட்டம் ஆகியவற்றை முன்னெடுத்திருந்தது.

SLT-MOBITEL இன் சந்தைப்படுத்தல் சேவைகள் பொது முகாமையாளர் அனுருத்த சூரியாரச்சி மற்றும் சில இதர ஊழியர்கள், பாடசாலையின் அதிபர் மற்றும் ஊழிய அங்கத்தவர்களுடன், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

SLT-MOBITEL இன் “நாடு முழுவதிலும் சுவாசத்தையும், உரத்தையும் பயிரிடுவோம்” எனும் திட்டத்தின் 9ஆவது நடவடிக்கையாக மீரிகம பிரதேசத்தில் இலுப்பை மர நடுகைத் திட்டம் அமைந்திருந்தது. இந்தத் திட்டத்தினூடாக, வளியின் தரத்தை மேம்படுத்துவது, பச்சை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை தணிப்பது மற்றும் மண் வளத்தை மேம்படுத்துவது போன்றன இலக்காக அமைந்துள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், 50 இலுப்பை மரக் கன்றுகள் பயிரிடப்பட்டிருந்தன. இதுவரையில் SLT-MOBITEL இனால் இது போன்ற திட்டங்கள் மொனராகலை, உமந்தாவ, அனுராதபுரம், குண்டசாலை போன்ற பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வின் போது, SLT-MOBITEL இனால் புத்தகங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்ததுடன், நூலகத்தை மறுசீரமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இதனூடாக, இந்தப் பாடசாலையில் பயிலும் 400 க்கும் அதிகமான மாணவர்களுக்கு தமது அறிவை மேம்படுத்திக் கொள்ளவும், வாசிப்புப் பழக்கத்தை விருத்தி செய்து கொள்ளவும் வலுவூட்டப்படுகின்றது. SLT-MOBITEL இன் ESG நிகழ்ச்சியினால் சூழலை பாதுகாக்கும் செயற்பாடுகளில் கவனம் செலுத்துவதற்கு நிறுவனங்களுக்கு வழிகாட்டப்படுவதுடன், சமூகத்தின் நலனை மேம்படுத்துவதிலும், காலநிலை இடர்களை நிர்வகிப்பதற்கு உதவுவதிலும் கவனம் செலுத்தப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .