2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புதிய அவதாரம் எடுத்த வண்ணத்துப் பூச்சி

Ilango Bharathy   / 2021 ஜூலை 19 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவில் 1960 ஆம் ஆண்டுமுதல் அழிந்து வருவதாகக் கருதப்பட்ட இராட்சத வண்ணத்துப்பூச்சி இனம் மீண்டும் பெருகுவது முதல் தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டச் எல்ம் நோய், காலநிலை  மாற்றம், மற்றும் ஒட்டுண்ணி  ஈக்கள் என்பவற்றாலேயே இந்த வண்ணத்துப் பூச்சி இனமானது  அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகக்   கூறப்பட்டது.

எனினும் தற்பொழுது டோர்செட் போர்ட்லேன்ட் தீவில் உள்ள எல்ம் மரங்களில் சூழல் பாதுகாப்பாளர்களால் இரண்டு வகை நுண்புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவை  வண்ணத்துப் பூச்சிகளாக  வெளிப்படும்போது  பழுப்பு நிறமாகவும் அதன் சிறகுகளைச்சுற்றி நீல நிற அடையாளம் கொண்டும் இருக்கும் எனவும்  கூறப்படுகின்றது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X