2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இரணைமடுகுளத்தின் வான் கதவுகள் திறப்பு

Niroshini   / 2021 நவம்பர் 28 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன், நடராசா கிருஸ்ணகுமார்

வடமாகாணத்தில்,  பாரிய நீர்ப்பாசனக்குளமான இரணைமடுக் குளத்தின் நான்கு வான் கதவுகள்,  கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன்
மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபால் ஆகியோரால் திறக்கப்பட்டன.

அதிக மழைவீழ்ச்சி காரணமாக, இரணைமடு  குளத்துக்கு அதன் நீரேந்து பகுதிகளில் இருந்து அதிக நீர் வரவு காரணத்தால், இன்று (28) அதிகாலை 6 மணியளவில், நான்கு வான் கதவுகளும் திறக்கப்பட்டன.  

இதற்கமைய, இரண்டு வான் கதவுகள், அங்குலத்துக்கும் இரண்டு வான் கதவுகள் 12 அங்குலத்துக்கும் திறக்கப்பட்டுள்ளன.

இதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபு,  குளத்துக்கு அதன் நீரேந்து பகுதிகளிலிருந்து அதிக நீர் வருகின்றமையால் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என்றார்.

 எனவே, தற்போது வெளியேறுகின்ற நீர் காரணமாக, மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .