2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஞானசார தேரரின் கருத்துக்கு சிறிதரன் சீற்றம்

Niroshini   / 2021 நவம்பர் 22 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

விளக்கேற்றக் கேட்கும் தமிழ் அரசியல்வாதிகள் போதைப்பொருளைத் தடுப்பதற்கு தயாராக இல்லை எனவும் பாராளுமன்றத்தில் தமிழர்களின் பிரதிநிதிகள் என்ன செய்கின்றார்கள்? என்றும் 'ஒரே நாடு- ஒரே சட்டம்' செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர்  தெரிவித்துள்ள கருத்து, மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதாக அமைந்துள்ளது என, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், நீதிமன்றத்தை மதிக்கத் தெரியாது, இந்த நாட்டின் நீதித்துறையையே அவமதித்த மிலேச்சத்தனமான இனவாதியான ஞானசார தேரர், போதைப்பொருள் ஒழிப்பு குறித்துப் பேசுவது நகைப்புக்கிடமானதாகவே உள்ளது என்றார்.


மாவீரர்களை நினைவேந்துவது தமிழர்களின் உயிர்ப்போடும், உணர்வோடும், கலாசார மரபியல்களோடும் இரண்டறக் கலந்த நிகழ்வு எனத் தெரிவித்த அவர், அந்த நினைவேந்தலுக்கான உரிமை மறுக்கப்படுகிறபோது அதற்கெதிராய் குரல் கொடுப்பதென்பது தன்னியல்பு எனவும் கூறினார்.

தமது உரிமைக் கோரிக்கைக்கு செவிசாய்க்கவே தயாராயில்லாத, எந்நேரமும் இனவாதத்தைக் கக்கும் ஞானசாரதேரரின் இத்தகைய கருத்து, அதிலும் குறிப்பாக மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளில் அவர் தெரிவித்துள்ள இக்கருத்து, தமிழர்களின் உணர்வுகளை சீண்டிப்பார்ப்பதாகவே அமைந்துள்ளது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .