2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’எனது நிதியை மக்களுக்கு பகிர்ந்தளியுங்கள்’

Niroshini   / 2021 ஜூன் 16 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட், சண்முகம் தவசீலன்

இந்த வருடத்துக்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டை, வன்னி மாவட்டத்தில் பட்டினியில் வாழும் மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில், பிரதமருக்கு, அவர், இன்று (16) அனுப்பியுள்ள கடிதத்திலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில், ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வருடாந்தம் அபிவிருத்தித் திட்டங்களுக்காக அரசாங்கத்தால் ஒதுக்கீடு செய்யப்படும் தலா ஒரு கோடி ரூபாய் நிதியை, கொரோனா தொற்று காரணமாகவும், பயணக் கட்டுப்பாடு காரணமாகவும் வாழ்வாதாரத்தை இழந்து பட்டினியில் வாடும் ஏழைக் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்குமாறும், இவ்வருடம் பட்டினிச் சாவுகளை தடுக்க இந்நிதிகளை பயன்படுத்துமாறும், குறிப்பிடப்பட்டுள்ளது.
 
'அபிவிருத்தித் திட்டங்களை அடுத்த வருடமும் முன்னெடுக்க முடியும். பன்முக நிதி ஒதுக்கீட்டை கையாளும்; நிதி அமைச்சர் என்ற வகையில் எனது பத்து மில்லியன் ரூபாய் நிதி மட்டுமல்லாமல், 225 பாராளுமன்ற உறுப்பினர்களினதும் 2250 மில்லியன் ரூபாய் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டையும் அந்தந்த மாவட்ட கொரோனா நிதிக்காக, விடுவிப்பது காலத்தின் தேவையாகும்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .