2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

13.34 சதுர கி.மீ பரப்பளவு மாத்திரமே மிகுதி உள்ளது

Niroshini   / 2021 ஜூன் 20 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

தேசிய இலக்கை பூர்த்திசெய்து, இலங்கையை மிதிவெடி இல்லாத நாடாக மாற்றுவதற்கு, 13.34 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் உள்ள மிதிவெடிகள் மாத்திரமே, இன்னும் அகற்ற வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வழிக்காட்டலுக்கு அமைய, இலங்கை பொறியியலாளர் படையணியின் இலங்கை இராணுவ மனிதாபிமான மிதிவெடி அகற்றும் பரிவினர், 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒட்டுமொத்தமாதக அடையாளம் காணப்பட்ட மற்றும் அபாயகரமான பகுதிகளில் உள்ள மிதிவெடிகளை அகற்றுவதற்காக விரைவாக செயற்பட்டு வருகின்றனர்.

2002ஆம் ஆண்டு முதல் இன்றுவரை, இலங்கையில் மிதிவெடி அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்ட அரச நிறுவனமான SLADU மொத்த வெடிபொருள் மற்றும் மிதிவெடி பிரதேசமான 1316.65 சதுர கிலோ மீற்றர்  பரப்பரவில் 886.19 சதுர கிலோ மீற்றர்  நிலப்பரப்பில் வடக்கில் அபாயகரமான மிதிவெடிகளை அகற்றியுள்ளது.

ஏனைய அனைத்து சர்வதேச மற்றும் உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்கள் (INGO) இதுவரை 417.12 சதுர கிலோ மீற்றர் வரையான நிலப்பரப்பில் உள்ள மிதிவெடிகளை அகற்றியுள்ளன.

இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் மிதிவெடி அகற்றும் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக தலைமை கள பொறியியலாளரும் இலங்கை பொறியியலாளர்கள் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர, மிதிவெடி அகற்றும் பகுதி தளபதிகளுடன் இணைந்து வடக்கில் உள்ள மிதிவெடி அகற்றும் பகுதிகளை, அண்மையில் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .