2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘தடுப்பூசி குத்தாவிடின் தனியார் பஸ்கள் ஓடாது’

Editorial   / 2021 மே 10 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகல தனியார் பஸ் சேவையாளர்களுக்கும் இவ்வாரத்துக்குள் கொரோனா தொற்றை தடுப்பதற்கான தடுப்பூசியை ஏற்றவேண்டும். அவ்வாறு செய்யாவிடின், பஸ்சேவைகளில் இருந்து விலகிக்கொள்வதற்கு ஒன்றிணைந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

எதிர்வரும் 17ஆம் திகதி வரையிலும் அரசாங்கத்துக்கு காலக்கெடு விதித்துள்ளோம் எனத் தெரிவித்த கெமுனு விஜேரத்ன, அதற்கிடையில் சகல தனியார் பஸ்களின் சேவையாளர்களுக்கும் தடுப்பூசியை ஏற்றுவதற்கான வழிவகைகளை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என்றும் கூறினார்.

தனியார் பஸ் நடத்துனர்கள் மற்றும் சாரதிகளில் பலர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்களுடன் நேரடியாக தொடர்புகளை பேணுகின்ற, பொது போக்குவரத்து சேவைகளில் ஈடுபட்டிருக்கும் சகல பஸ்களின் பணியாளர்கள், ரயில்வே உள்ளிட்ட ஏனைய போக்குவரத்து துறைகளைச் சார்ந்தவர்களுக்கும் இந்த தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X