2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஜனாதிபதிக்கு இறையாசி வேண்டி சிறப்புப் பூசை வழிபாட்டில் அமைச்சர் டக்ளஸ்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 19 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிப்பிரமாணத்தையொட்டி, அவருக்கு ஆசி வேண்டி பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிரதி அமைச்சர் வீரக்குமார திஸநாயக்கவும் சிறப்பு பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.

கொழும்பு பம்பலப்பிட்டி நாட்டுக்கோட்டை நகரத்தார் ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூசை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதி அமைச்சர் வீரக்குமார திஸாயக்க, அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, ஆலோசகர் திருமதி ஜெகராசசிங்கம,; யாழ் மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா மற்றும் அமைச்சுக்கு கீழான பனை அபிவிருத்திச்சபை, தேசிய வடிவமைப்புச்சபை, இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச்சபை, தேசிய கைப்பணிச்சபை உள்ளிட்டவற்றின் துறைசார்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.

அங்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது பதவியேற்புக்காக இன்று பதவிப்பிரமாணம் செய்கின்ற நிலையில் அவருக்கு இறையாசிவேண்டி இந்த சிறப்பு பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவருடைய அரசு தொடர்ந்தும் மக்களுக்கு நல்ல பல சேவைகளைச் செய்ய வேண்டுமென்றும் அப்பணியை ஜனாதிபதி  திறம்படச் செய்வார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது.  ஜனாதிபதி; சகல சௌபாக்கியமும் பெற்று நீடுழிகாலம் வாழ வேண்டுமென்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வாழ்த்தினார்.

தொடர்ந்து பிரதி அமைச்சர் வீரக்குமார திஸநாயக்க, அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, யாழ். மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, பிரம்மஸ்ரீ நாகராஜக்குருக்கள் ஆகியோர் ஜனாதிபதிக்கு இறையாசி வேண்டி தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .