2024 மார்ச் 28, வியாழக்கிழமை

உளவாளிகள்மீதான வன்முறை நடவடிக்கைகளுக்கு சீஐஏ கண்டனம்

Editorial   / 2021 ஒக்டோபர் 10 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க உளவு நிறுவனமான சீஐஏ அதன் டசின் கணக்கிலான உளவாளிகள் கடந்த வருடங்களில் கைதுசெய்யப்பட்டும், கொல்லப்பட்டு அல்லது சமாதானப்படுத்தப்பட்டு இருப்பதை அடுத்து தமது  முன்னணி உளவாளிகளிடம் உலகெங்கும் அவர்களின் செயல்பாட்டு பாதுகாப்பை மேம்படுத்துமாறு அறிவித்துள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.  

கடந்த வாரம் உயர்மட்ட அமெரிக்க நுண்ணறிவு அதிகாரிகளிடமிருந்து ஒவ்வொரு ஏஜன்ஸி நிலையத்துக்கும் ஒரு தகவல் ஆவணம் அனுப்பப்பட்டது. அதில் போட்டிசேவைகளால் கைது செய்யப்பட்ட அல்லது கொல்லப்பபட்ட மனித ஆதாரங்களின் சரியான எண்ணிக்கையை குறிப்பிட்டிருந்தனர். இநத விபரமானது பொதுவாக பாதுகாக்கப்பட்ட இரகசியமாகும் என்றும் டைம்ஸ் குறிப்பிட்டிருந்தது. .

அந்த ஆவணத்தில் தகவல் வழங்குவோராக புதியவர்களை நியமிப்பதற்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு பல விடயங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. குறைந்த நோக்கு, வெளிநாட்டு உளவு நிறுவனங்களின் எதிர் நுண்ணறிவுபற்றி குறைத்து மதிப்பிடல், மற்றும் சாத்தியமான அபாயங்கள்பற்றி சரியான கவனம் செலுத்தாமல் ஆட்சேர்த்தல் என்பவை உள்ளடங்களாக பல விடயங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. புதிய ஆதாரங்களைக்கொண்டுவருவதோடு அந்தப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துமாறு அதிகாரிககளுக்கு இது நினைவூட்டுகிறது.

கடந்த ஆண்டுகளில் அமெரிக்க உளவு வலையமைப்புக்களைக் கண்டறிந்து வெளியேற்றுவதில் சீனா ஆற்றல் மிக்கதாக இருந்ததென்று தகவல்கள் சுட்டிக்காட்டின.  இத்தகைய பிரச்சினையொன்றில் பீஜிங்கினால் குறைந்தபட்சம் 12 சந்தேகிக்கப்பட்ட உளவாளிகள் கொல்லப்பட்டும், மற்றும் பலர் கைது செய்யப்பட்டதாகவும் 2012ஆம் ஆண்டு டைம்ஸ் தெரிவித்தது.

எப்படியிருப்பினும் அண்மைய டைம்ஸ் தகவலின்படி அமெரிக்காவின் மற்ற எதிரி உளவாளிகள் உட்பட ரஷ்யா, ஈரான், மற்றும் பாகிஸ்தான் என்பனவும் தமது திறனை அதிகரித்துக்கொண்டுள்ளன. சில சந்தர்ப்பங்களில் சீஐஏ ஆதாரங்களை இரட்டை முகவர்களாக மாற்றுகின்றன. இந்தவகையில் எத்தனை உளவாளிகள். அந்த நிலைக்குள்ளாகியுள்ளனர் என்று அண்மைய தகவலில் தெரிவிக்கப்படவில்லை.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X