2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வெங்காயத்தால் பரவும் கொடிய நோய்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 24 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில், வெங்காயத்துடன் தொடர்புடைய சல்மொனெல்லா (salmonella )என்ற பக்றீரியா நோய்த் தொற்றுப் பரவிவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோவின் சிவாவா நகரத்தில் இருந்து அமெரிக்காவுக்கு  இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயங்களில் இருந்தே  இத் தொற்று பரவிவருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில் முழு சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் உள்ளிட்ட வெங்காயங்களை மக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க நோய் தடுப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில் ”இந்நோயால்  37 மாநிலங்களில் 650 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 129 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். .

டெக்சாஸ் மற்றும் ஓக்லஹோமாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இதுவரை எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை.

இந்நோயானது முதலில் குடலை பாதிப்பதோடு  இரைப்பை நோய்க வழி வகுக்கின்றது.  பாதிக்கப்பட்டவர்களிடம் வயிற்று போக்கு, காய்ச்சல், வயிற்று பிடிப்புகள் போன்ற அறிகுறிகள் தென்பட்டுள்ளன. மேலும் இத் தொற்றானது 4-7 நாட்கள் வரை நீடிக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X