2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மியான்மருக்கு ஆயுத விற்பனையை நிறுத்த ஐ.நா தீர்மானம்

Freelancer   / 2021 ஜூன் 19 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மரில் உருவாகியுள்ள இராணுவ ஆட்சிக்கு பதிலளிக்கும் வகையில் மியான்மருக்கான ஆயுத விற்பனையை நிறுத்த ஐ.நா நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வகையில், மியான்மர் இராணுவ ஆட்சியை கண்டித்து ஆயுத விற்பனையை நிறுத்தும் தீர்மானத்தை ஐ.நா  பொதுச் சபை ஏற்றுக்கொண்டது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி போன்ற அரசியல் கைதிகளை விடுவிக்கவும், அமைதியான எதிர்ப்பாளர்களுக்கு எதிரான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ஐ.நா இதன்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த தீர்மானம் அரசியல் ரீதியாக முக்கியமானதாக கருதப்படுகின்றது.

இதற்கு 119 நாடுகள் ஆதரவளித்தன, பெலாரஸ் மட்டுமே அதற்கு எதிராக வாக்களித்தது.

மியான்மர் இராணுவத்தின் இரண்டு மிகப்பெரிய ஆயுத வழங்குனர்களான ரஷ்யா மற்றும் சீனா உட்பட  மேலும் 36 நாடுகள் வாக்களித்தன. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .