2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மைக்ரோசொப்ட் அதிரடி: அதிர்ச்சியில் ஊழியர்கள்

Ilango Bharathy   / 2023 ஜனவரி 19 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மைக்காலமாக வருவாயை அதிகரிக்கும் நோக்கில் உலகின் முன்னணி நிறுவனங்களான டுவிட்டர், மெட்டா, அமேசான், கூகுல் ஆகிய நிறுவனங்கள் தங்களது  ஊழியர்களைப்  பணிநீக்கம் செய்து வருகின்றன.

அந்த வரிசையில் தற்போது  பிரபல மென்பொருஸ் நிறுவனமான மைக்ரோசொப்டும் இணைந்துள்ளது.

 மைக்ரோசாப்ட் நிறுவனமானது அதன் ஊழியர்களில் 5 சதவீதமானோரை, அதாவது சுமார் 11,000  ஊழியர்களை நேற்றைய தினம் பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மைக்ரோசொப்ட், கூகுள், மெட்டா ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்து இவ்வாறான ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்கள் கலக்கமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X