2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பலோசிஸ்தான் சுரங்கங்களில் இழிவான பணிகள்

Editorial   / 2021 நவம்பர் 23 , பி.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலோசிஸ்தான்(பாகிஸ்தான்):

 பலோசிஸ்தான் நிலக்கரி சுரங்கங்களில் இடம்பெறும் இழிவான வேலை நிலைமை மற்றும் மனித உரிமைகள் துஷ்பிரயோகம் தொடர்பாக பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் மட்டும் நிலக்கரி சுரங்க விபத்துக்களில் குறைந்தபட்சம் 176 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதுடன் 180 பேர் காயமடைந்துள்ளனர் என்று பாகிஸ்தான் மத்திய சுரங்கத்தொழிலாளர் அமைப்பு வழங்கிய விபரங்களின்படி தெரியவருகிறது.

பலோசிஸ்தானில் உள்ள சுரங்கத் தொழிலாளர்கள் அரசு சாரா நபர்கள் இலக்கு வைக்கும் தாக்குதல்களின் அபாயத்தையும் எதிர் கொள்கின்றனர் என்று  ஒரு சுதந்திரமான ஜனநாயக மற்றும் இலாபநோக்கமற்ற அமைப்பான எச்ஆர்சிபி வெளிப்படுத்துகிறது.

நிலக்கரிச் சுரங்க தொழில் சர்வதேச அளவில் அபாயகரமான தொழிலாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால், சுரங்க உரிமையாளர்களும் ஒப்பந்தக்காரர்களும் ஒவ்வொரு சுரங்கத் தளத்திலும் செயல்படும் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் ஓர் அவசர சுகாதாரப் பணியாளர் இருப்பதையும், வழக்கமான உள் பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதையும் உறுதி செய்ய வேண்டுமென்று குவெட்டாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்

மேற்படி உரிமைகள் அமைப்பின் மூத்த உறுப்பினர் ஹூஸைன் நாகி தெரிவித்தார்.

வெளி பாதுகாப்பு ஆய்வுகளை பொறுத்தமட்டில், மாகாணத்தில் உள்ள 6,000த்துக்கும் மேற்பட்ட சுரங்கங்களில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மேற்பார்வையிடங்களில் 27 சுரங்க ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர் என்பது கவலைக்குரிய விடயமாகும்.

பெரும்பாலான நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள், ஊழியர்களின் முதியோர் நலன்கள் நிறுவனம் அல்லது பிற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் பதிவு செய்யப்படவில்லை என்பதை அமைப்பின் பரந்த அளவிலான  கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்துகின்றன, இதனால் அவர்கள் வேலை செய்ய முடியாமல் போகும் வேளைகளில் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எச்ஆர்சிபியின் கூற்றுப்படி பல தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் நிலக்கரிச் சுரங்கங்களைச் செயல்படுத்தும் ஒப்பந்தக்காரர்கள் தொடர்பில் ஆழ்ந்த அதிருப்தியுடன் இருப்பதாகக் கூறுகிறார்கள், ஏனெனில் ஒப்பந்தக்காரர்கள் தங்கள் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் சிறிய பங்குகளைக் கொண்டுள்ளதுடன் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். பல சந்தர்ப்பங்களில், ஒப்பந்தக்காரர்களே தொழிலாளர் சங்கங்களின் தலைவர்களாக செயல்படுகிறார்கள் என்பதும் கவலைக்குரிய விடயமாகும்,

மேலும், பலுசிஸ்தானில் இறப்பு மற்றும் காயத்திற்கான இழப்பீடு மிகவும் குறைவாக உள்ளது(அதாவது பாகிஸ்தானிய ரூ. 300,000) மற்ற மாகாணங்களுடன் ஒப்பிடும்போது (ரூ. 500,000) ஆகும் என்றும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X