2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பெண்களுக்கு சீனா விதித்த புதிய தடையால் சர்ச்சை

Freelancer   / 2023 மார்ச் 07 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன அரசு பெண்கள் உள்ளாடை விளம்பரத்தில் நடிப்பதற்குத் தடை விதித்துள்ளது. சீனாவைச் சேர்ந்த பெண் மொடல்கள் உள்ளாடை விளம்பரத்தில் நடிக்கவும் நேரடி ஒளிபரப்பு செய்யவும் (லைவ் ஸ்ட்ரீமிங்) சீன அரசாங்கம் தடை விதித்துள்ளது

ஆபாச ரீதியான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவுவதைத் தடுக்கவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனால் சீனாவில் தற்போது பெண்களின் உள்ளாடை விளம்பரங்களிலும் ஆண் மொடல்களே நடித்து வருகின்றனர். இவ்வாறு ஆண்கள் நடிக்கும் பெண்களின் உள்ளாடை விளம்பர  வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகின்றது.

இந்தத் தடை பெண்களின் வேலை வாய்ப்புகளை அபகரித்துள்ளதால் பெண்கள் நல அமைப்புகளின் எதிர்ப்புக்கும் உள்ளாகியுள்ளது. சீனாவில் ஏற்கனவே இப்படி பல விதிமுறைகள், கட்டுப்பாடுகள் மற்றும் தடைகெளை அந்நாடு விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .