2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தைவானுக்கு அருகில் சீனா கடும் இராணுவ பயிற்சி

R.Maheshwary   / 2021 ஒக்டோபர் 13 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன இராணுவம்  தைவானுக்கு அருகில் இருந்து கடல்வழியாக கடற்கரை தரை இறங்கல் மற்றும் தாக்குதல் பயிற்சிகளை நடத்தியதாகவும் ஆனால் இந்நிகழ்வு தலைநகர் தைபேயில் நிலவும் பதற்றத்துடன் சம்பந்தப்படவில்லையென்றும் திங்களன்று தெரிவித்தது.

ஜனநாயக முறையில் ஆட்சிசெய்யும் தைவானை தன் சொந்தப்பிரதேசம் என்று கூறும்  சீனா, தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்தில் திரளான விமானப்படை ஊடுருவலை நடத்தி; இராணுவ மற்றும் அரசியல் அழுத்தங்களை பிரயோகிப்பதாகவும் சீன ஆட்சியை ஏற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்துவதாகவும் தைவான்  புகார் கூறியுள்ளது. 

கடந்த  நாட்களில் பியூஜியன் மாகாணத்தின் தென்பகுதியில் இராணுவ பயிற்சிகள் நடைபெற்றதாக அதிகாரபூர்வ செய்திப்பத்திரிகை ஷமக்கள் விடுதலை இராணுவ தினசரி| தெரிவித்தது. இப்பயிற்சி நிகழ்வில் அதிர்ச்சி துருப்புக்கள், படகு நிபுணர்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றதாகவும் இராணுவ பத்திரிகை தெரிவித்தது.

துருப்புக்கள் கடற்கரையைக் கைப்பற்றவும் பல்வேறு போர் பணிகளைச் செய்யயவும்  பல அலைகளாகப் பிரிக்கப்பட்டனர். அத்துடன்  படகுகளில் உள்ள போர் வீரர்கள் கடற்கரையை தாக்கும், புகைக்குண்டுகளை வீசும், முள்வேலிகளை உடைத்துச்செல்லும் மணலில் அகழிகளைத்தோண்டும் காட்சிகள் வீடியோ மூலம் காட்டப்பட்டன. பயிற்சியில் குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களே பங்குபற்றினர்.

காலநிலை தெளிவாகவும், கடல் அமைதியாகவும் இருந்தன. தெற்கு பியூஜியன் வெப்பமண்டல புயலால் பாதிக்கப்பட்டுள்ளதால் திங்களன்று இந்தப்பயிற்சி நடைபெறவில்லை.

சீனா அதன் கடற்கரையிலும் சர்ச்சைக்குரிய தென்சீனக்கடலிலும் வழமையாக இராணுவப்பயிற்சிகளை மேற்கொள்கிறது. இந்நிலையில் தைவான் தமக்கெதிரான சீனாவின் கட்டாய தந்திரோபாயத்தைக் கண்டித்துள்ளது. அத்துடன் தாம் தாக்கப்பட்டால் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் என்றும் தெரிவித்தது.

வார இறுதியில் சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங் மீண்டும் ஒன்றிணை என்னும் சபதத்தை வலியுறுத்தினார். தைவான் ஜனாதிபதி ஸாய் இங் வென் தம்மை கட்டாயப்படுத்தி அடிபணியவைக்க முடியாது என்று  கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X