2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கழிவறையில் அதிக நேரம் செலவிட்டால் ஆபத்து

Ilango Bharathy   / 2021 நவம்பர் 18 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கழிவறையில் அதிக நேரத்தை செலவிடும் பழக்கம் அண்மைக்காலமாக மக்களிடையே அதிகரித்து வருகின்றது.

குறிப்பாக பலர் கழிவறையில் தொலைபேசியைப் பயன்படுத்துவது, புத்தகங்களை படிப்பது, கேம் விளையாடுவது உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் கடுமையான உடல்நல கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக மூல நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் பிரித்தானியாவைச் சேர்ந்த  மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் கழிப்பறையில் தொலைபேசியை பயன்படுத்துவதால் தொலைபேசியின் மேற்பகுதில் கிருமிகள் பன்மடங்கு அதிகரிப்பதாகவும், எனவே 10 நிமிடங்களுக்கு மேல் கழிவறையில் செலவிட கூடாது எனவும்   மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


 


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .