2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

காந்தியின் சிலை சேதம்

Ilango Bharathy   / 2021 நவம்பர் 17 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலியாவுக்குப்  பரிசளிக்கப்பட்ட மகாத்மா காந்தியின் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் அந்நாட்டில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெல்பர்ன் நகரில் அமைந்துள்ள அவுஸ்திரேலிய-இந்திய சமூக மையத்திற்கு, இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு  மகாத்மா காந்தியின் உருவ சிலையொன்று  பரிசளிக்கப்பட்டது.

இதனை அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மொரீசன் கடந்த 12ஆம் திகதியன்று திறந்து வைத்துள்ளார்.

எனினும் திறந்துவைக்கப்பட்ட சிலமணிநேரங்களிலேயே குறித்த சிலையானது , மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.  

இதனையடுத்து ”கலாச்சார நினைவு சின்னங்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.இந்த அளவிற்கு அவமரியாதை செய்வது வெட்கக்கேடானது என பிரதமர் ஸ்காட் மொரிசன் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .