2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

இப்படியும் ஒரு போக்குவரத்து சமிக்ஞையா?

Ilango Bharathy   / 2022 நவம்பர் 27 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எம்மில் பெரும்பாலானோர் வீதிகளில் செல்லும் போது கூட தொலைபேசியினைப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். இதனால்  வீதிவிபத்துக்களும் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறுவதைத் தடுக்கும் வகையில் தென்கொரிய அரசு  வீதிகளின் ஓரம் இருக்கும் நடைப்பாதையில் விளக்குகளை அமைத்துள்ளனர்.

‘வீதியில் நடந்து செல்பவர்கள் பலரும்  தொலைபேசியைப் பார்த்துக்கொண்டே நடப்பதால், போக்குவரத்துச் சமிக்ஞைகளை கவனிக்கத் தவறுவதாகவும் இதனைக் கருத்தில் கொண்டே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதன்மூலம்  வாகனங்கள் வரும் போது சிவப்பு நிறத்திலும், சாலையை கடக்க தயாராகும்போது பச்சை நிறத்திலும் இந்த விளக்குகள் மாறும்.

மேலும், தொபேசியைப் பார்த்துக்கொண்டே, வாகனங்களை கவனிக்காமல் மக்கள் சாலையில் நடக்க முற்பட்டால், அவர்களது தொலைபேசிக்கு சிக்னல் அனுப்பும் வசதியும் அறிமுகப்பட்டுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென் கொரிய போக்குவரத்து துறையின் இந் நடவடிக்கைக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .