2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மருத்துவ சாதனங்களில் இனப் பாகுபாடு?

Ilango Bharathy   / 2021 நவம்பர் 25 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவில் மருத்துவச் சாதனங்கள் சிலவற்றில் இனப் பாகுபாடு காணப்படுவதாக வெளியாகியுள்ள செய்திகள் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள ஒட்சிசனின் அளவைக் கணக்கிடும் ஒக்சிமீட்டா் (Oximeter) உள்ளிட்ட கருவிகள் வெள்ளையான தோல் நிறத்தைக் கொண்டவர்களை விட கருமையான தோல் நிறத்தைக் கொண்டவர்களின்  உடலில் துல்லியம் குறைவாக செயல்படுவதாகவும், இதனால்  அவா்கள் அதிகம் உயிரிழந்திருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும்  கூறப்படுகின்றது.

மேலும் பெரும்பாலும் அந்நாட்டில் கிருமித்தொற்றால் மரணமடைந்தோர், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவோர் ஆகியோரில் கறுப்பினத்தவர் அல்லது ஏனைய சிறுபான்மை இனத்தவரின் விகிதம் அதிகம் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.

பெரும்பாலும் வெள்ளை இனத்தவா்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளில் மருத்துவக் கருவிகள் வடிவமைக்கப்படுவதால் இத்தகைய பாகுபாடு நிலவுவதாகக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

.இந்நிலையில் இவ்விடயம்  குறித்து ஆராய அந்நாட்டு சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளதோடு ஜனவரி இறுதியில் இதற்கான தீர்வு அளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .