2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தியனமென் சதுக்க அடக்கு முறையை முற்றிலும் சரியானது: சீனா

Editorial   / 2021 ஒக்டோபர் 15 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனா தன் கடும்போக்கு, அரசியல் நடவடிக்கையை முற்றிலும் சரியானதென்று நியாயப்படுத்தியுள்ளது. வியாழனன்று சீனா வெளியிட்ட கருத்து ஒன்றில் 1989ஆம் ஆண்டு பீஜிங்கின் சின்னமான தியனமென் சதுக்கத்தில் போராட்டங்கள் நடத்திய மாணவர்கள்மீது ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி பாரிய தாக்குதல் நடத்தி அதில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதை  சீனா முற்றிலும் சரியான நடவடிக்கை என்று கூறியுள்ளது. அது பின்பற்றும் சோசலிஸ அரசியல் அமைப்பின் சரியான தெரிவு என்றும் கூறியுள்ளது. 

இந்த தாக்குதலின்போது நூற்றுக்கணக்கான ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களும் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களின்போது அவற்றை அடக்க சீன இராணுவம் மிருகத்தனமான தாக்குதல்களை நடத்தியது.

வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்ட இந்தப் பாரிய  சதுக்கம் உலகம் முழவதும் பிரபல்யமானது. அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோ இத்தாக்குதல்களிலிருந்து உயிர் தப்பிய சிலரை வோஷிங்டனில் நிகழ்வின் 31ஆம் ஆண்டு நினைவு தினத்துக்கு முன்னர் சந்தித்தார். வோங் டான், சூ ஷியாகாங், லியேன் லீ மற்றும் ஹென்ரி லீ என்னும் நான்கு பேரே இவ்வாறு வோஷிங்டனின் மாநில திணைக்களத்தின் பூட்டிய அறைக்குள் நடைபெற்ற கூட்டத்தில் வெளிறவு செயலாளரை சந்தித்தவர்கள். ஹொங்கொங்கைத் தளமாகக்கொண்ட தெற்கு சீன மோர்னிங் போஸ்ட் பத்திரிகை இதனைத் தெரிவித்தது.

 போராட்டங்கள் குறித்த பல கேள்விகளுக்கு பதில் அளித்த சீன வெளியுறவு அமைச்சு செய்தித் தொடர்பாளர்  ஷாவோ லிஜியன் தியனமென் சதுக்க போராட்டம் ஒரு அரசியல் தொந்தரவு என்று குறிப்பிட்டார்.

 1980களின் இறுதியில் நடைபெற்ற அரசியல் குழப்பங்கள் தொடர்பாக சீன அரசாங்கம் தெளிவாக ஒரு முடிவை எடுத்தது. சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின்னர் கடந்த 70 வருடங்களில் சீனா பெரும் சாதனைகளைக்கண்டது என்பது ஒரு முழு உண்மை. எங்கள் வளர்ச்சிப்பாதை தேசிய நிலைமைகளுக்கு ஏற்ற சரியான தெரிவு. அத்துடன் சீன மக்களாலும் அங்கீகரிக்கப்பட்டது என்று கூறிய அவர் சீன பண்புகளுடன் சோலிஸத்தில் உறுதியாக இருப்போம் என்றும் கூறினார்.  அத்துடன் அமெரிக்காவிடம் தவறுகளை திருத்திக்கொள்ளுமாறும், சீனாவின் உள்விவகாரங்களில் எநதவகையிலும் தலையிடுவதை நிறுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

அமெரிக்க இராஜாங்க அமைச்சு செய்தி தொடர்பாளர் மோர்கன் ஒர்ட்டாகுஸ் ஓர் அறிக்கையில் 31 வருடங்களுக்குப் பின்னரும் தியனமென் சதுக்க ஆர்ப்பாட்டக்காரர்களில். கொல்லப்பட்ட அல்லது காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை அறியமுடியவில்லை.  அதனை அறிய நாங்கள் வலியுறுத்துவோம் என்று கூறியுள்ளார். 

தாக்குதல்களில் 319 பேர் கொல்லப்பட்டதாக முன்னர் வெளியிடப்பட்ட தகவலில் ஏதேனும் மாற்றமுண்டா என்று கேட்டதற்கு அதுபற்றிய எந்த தகவலும் தன்னிடம் இல்லையென்று ஷாவோ தெரிவித்தார்.

சீனாவின் வளர்ச்சியின் மிகப்பெரிய சாதனை சீன அரசின் செயல் முற்றிலும் சரியானது என்பதையே காட்டுகிறது. இது சீனாவின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் நிலைநிறுத்துகிறது என்றும் அவர் கூறினார். இன்னொரு கேள்விக்கு அதாவது சீனாவின் முடிவு முழுவதுமாக சரியானதென்றால் அது ஏன் இணையதளத்தில் தியனமென் சதுக்க போராட்டங்களை தடுத்தது  எனறு கேட்டதற்கு சட்ட அடிப்படையிலேயே இணைய தளங்கள் இயங்குகின்றன என்று பதில் அளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X