2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நிலக்கரி, மின் உற்பத்தியை தீவிரப்படுத்த சீனா வலியுறுத்து

Editorial   / 2021 ஒக்டோபர் 15 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனா மின்தடையை எதிர்நோக்கியதை அடுத்து மேம்பட்ட நிலக்கரி, மின் உற்பத்தி நிலையங்கள், உள்நாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்திகளை தீவிரப்படுத்துவதன் முக்கியத்துவத்தை பீஜிங்கின் தேசிய சக்தி ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

சீனாவின் இரண்டாவது தளபதியான லீ கெஜாங் இந்த அறிவித்தலை விடுத்ததோடு 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் கார்பன் உமிழ்வை கட்டுபடுத்துவதற்கான உறுதிமொழியையும் வழங்கினார்.
 சீனாவின் கார்பன் உமிழ்வு அதிவேகமாக இருப்பதாக மற்ற நாடுகள் கூறும் நிலையில் சீனா இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளது.

இரண்டு வாரங்களில் கிளாஸ்கோவில் (COP26)) உச்சிமாநாடு நடைபெறவிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் நிலக்கரியை படிப்படியாக ஒழிப்பது தொடர்பாக உலகளாவிய ஒப்பந்தத்தைப்பெறுவதற்கான இங்கிலாந்தின் திட்டத்துக்கு இது பேரிடியாக அமையும் என்றும் கருதப்படுகிறது.  
உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் கொரோனா தாக்கத்துக்குப் பின்னர் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் சீனா தனது 682 நிலக்கரி சுரங்கங்களின் வருடாந்த உற்பத்தித் திறனை 55.33 மில்லியன் டன்களாக அதிகரிக்க உத்தரவிட்டது.

மற்ற  இடங்களைப் பொறுத்தவரையில் நெருக்கடி  மற்றும் மின்தடைக்கு மத்தியில் இந்தியாவும் உற்பத்தியை அதிகரிக்க தமது சுரங்கங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அதன் இறக்குமதியையும் அதிகரித்துள்ளது.  
சீனாவைப் பொறுத்தளவில் அது பாரிய அளவில் சூழலை மாசுபடுத்தும் நாடாக உள்ளது. அதன் மாசுபடுத்தும் சக்தியானது 50 சத வீதத்துக்குமேல் நிலக்கரியிலிருந்தே வருகிறது. பெருமளவு மாசு இதுவே என்று தெரிகிறது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X