2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘ஸ்குவிட் கேம்’ ஐ பார்த்த மாணவர்களுக்கு ஆயுள் தண்டனை

Ilango Bharathy   / 2021 நவம்பர் 28 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்குவிட் கேம்’ இணையத் தொடரைப் பார்த்த மாணவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட  சம்பவம் வடகொரியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடுமையான தண்டனைகளுக்கு பெயர்போன நாடான வடகொரியாவில்
சினிமா, பொழுதுபோக்கு உள்ளிட்ட கேளிக்கைகள் விடயங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வீடியோக்களையும் இணையத் தொடர்களையும் வட கொரியாவுக்குள் கொண்டுவருவதற்கும்  தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  நெட்ஃபிளிக்ஸில் இதுவரை வெளியான தொடர்களிலேயே மிகவும் பிரபலமான தொடராக ‘ஸ்குவிட் கேம் தொடரை சட்டவிரோதமாக பென் ட்ரைவில் வட கொரியாவுக்குள் கொண்டுவந்து அதனை பென் ட்ரைவ் மூலம் விற்பனை செய்தவருக்கு தூக்கு தண்டனையும், அத்தொடரைப் பார்த்த பாடசாலை  மாணவர்களுக்கு ஆயுள் தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளையும் அந்நாட்டு அரசு  விதித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் குறித்த மாணவர்கள் கல்வி கற்ற பாடசாலையின் தலைமையாசிரியர், வகுப்பாசிரியர் உள்ளிட்டவர்களையும்  பணி நீக்கம் செய்யவும் வட கொரிய அரசு உத்தரவிட்டுள்ளது.

வடகொரியாவில் மாணவர்களுக்கு இது போன்ற கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவது இதுவே முதல் முறை எனக் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .