2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘வுஹான் ஆய்வு கூடத்திலிருந்தே கொரோனா’

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 08 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வுஹானில் உள்ள சீன ஆய்வு கூடம் ஒன்றில் இருந்தே கொரோனா கசிந்ததாக, ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் தேசிய ஆய்வு கூடம் ஒன்றின் கொரோனாவின் மூலம் தொடர்பான அறிக்கை ஒன்று தெரிவிப்பதாக, வோல் ஸ்றீட் ஜேர்னல் இணையத்தளம் நேற்று தெரிவித்துள்ளது.

இரகசிய ஆவணம் குறித்து அறிந்தவர்களை மேற்கோள் காட்டியே குறித்த தகவலை வோல் ஸ்றீட் செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வறிக்கையானது கடந்தாண்டு மே மாதம், கலிபோர்னியாவிலுள்ள லிவர்மோர் தேசிய ஆய்வு கூடத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. பின்னர் கொரோனாவின் மூலம் குறித்து ஐ. அமெரிக்க இராஜங்கத் திணைக்களம் விசாரிக்கும்போது அதற்கு அனுப்பப்பட்டதாக வோல் ஸ்றீட் மேலும் கூறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .