2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொரோனா: ‘வறிய நாடுகளில் தடுப்பூசிகள் முடிவடைகின்றன’

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 22 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூகோளப் பகிர்வு திட்டம் ஒன்றின் மூலம் கொரோனாத் தடுப்பூசிகளைப் பெறுகின்ற பாரிய எண்ணிகையான நாடுகளிடம் திட்டங்களைத் தொடர்வதற்கான போதுமான தடுப்பூசிகள் இல்லை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

131 நாடுகளுக்கு கொவாக்ஸ் திட்டமானது 90 மில்லியன் தடுப்பூசிகளை விநியோகித்துள்ளதாக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசகர் புரூஸ் அய்ல்வோர்ட் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், உலகளாவிய ரீதியில் இன்னும் பரவும் கொரோனாவிலிருந்து சனத்தொகையை பாதுகாப்பதற்கு எதுவித அருகிலும் வரவில்லை என அய்ல்வோர்ட் கூறியுள்ளார்.

ஆபிரிக்காவில் சில நாடுகள் மூன்றாவது அலை தொற்றுக்களை எதிர்கொண்ட நிலையிலேயே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.

செல்வந்த நாடுகள் தடுப்பூசிகளைப் பதுக்குவதை நிறுத்துமாறு தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் றமபோஷா நேற்று தெரிவித்துள்ளார்.

ஆபிரிக்காவில் சனத்தொகையின் இரண்டு சதவீதமாக 40 மில்லியன் தடுப்பூசிகளே செலுத்தப்பட்டுள்ளதாக றமபோஷா கூறியுள்ளார்.

உகண்டா, சிம்பாப்வே, பங்களாதேஷ், ட்ரினிடாட் அன்ட் டொபாகோவில் எதிர்வரும் நாள்களில் தடுப்பூசிகள் முடிவடையும் சில நாடுகள் ஆகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .