2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஓமிக்ரான் தடுப்பூசியை தயாரிக்கிறது சீனா

Editorial   / 2021 டிசெம்பர் 02 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் சினோவக், தேவையேற்பட்டால் இலக்கு வைக்கப்பட்ட ஓமிக்ரதன் தடுப்பூசியை தயாரிக்க தயாராக உள்ளதாக தெரிவிக்கிறது.

உலகின் அண்மைய மாறுபாட்டைக் கையாள்வதற்குத் தேவையான மாற்றங்களை விஞ்ஞானிகள் தீர்மானித்தால், பாரிய உற்பத்தி 'ஒரு பிரச்சினை அல்ல' என்று தடுப்பூசிகள் விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர். 

ஓமிக்ரானுக்கு எதிரான தங்கள் ஊட்டத்தின் செயல்திறனை அதிகரிக்கச் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன என்பதை தாங்களும் ஆய்வு செய்வதாக மற்ற உற்பத்தியாளர்களும் உறுதிப்படுத்துகின்றனர்.

உலகளவில் அதிக கொவிட் -19 தடுப்பூசிகளை வழங்கியுள்ள சீன தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான சினோவக் தேவையேற்பட்டால், ஓமிக்ரோன் மாறுபாட்டிற்கு எதிராக ஒரு வகையை விரைவாக உருவாக்க முடியும் என்று உறுதி செய்கிறது. ஆனால் புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசி அவசியம் என்பதற்கான ஆதாரங்களுடன், ஒழுங்குமுறை ஒப்புதல்கள் பெறப்பட்ட பின்னரே இதனை தயாரிக்கமுடியும் என்றும் அது கூறிஙியுள்ளது.

 

தொழில்நுட்பமும் உற்பத்தியும் ஒரே மாதிரியானவை (மூதாதையர் கிருமியுடன்) மற்றும் திரிபை தனிமைப்படுத்திய பிறகு ஆராய்ச்சிக்கான தடுப்பூசியை மிக விரைவாக தயாரிக்க முடியும். உற்பத்தி ஒரு பிரச்சினை அல்ல என்று அந்த நிறுவனம் கூறியது.

ஆனால் தொடர்புடைய ஆய்வுகள் பூர்த்தி செய்யப்படவேண்டும் மற்றும் புதிய தடுப்பூசிகள் ஒழுங்குமுறை தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும்.

இந்த மாறுபாட்டிற்கு ஒரு தனி தடுப்பூசி உருவாக்கப்பட்டு தயாரிக்கப்பட வேண்டுமா என்று கூறுவது ஒரு முன் யோசனையாகும்.

புதிய தடுப்பூசி தேவையா என்பதைத் தீர்மானிக்க, அதன் உலகளாவிய பங்காளர் வலையமைப்பு மூலம் ஓமிக்ரான் மாறுபாடு தொடர்பான ஆய்வுகளை உன்னிப்பாகக் கண்காணித்து மாதிரிகளை சேகரித்து வருவதாக சினோவக் கூறியது.

தேவையேற்பட்டால், அபிவிருத்தியை விரைவாக முன்னெடுத்துச் செல்லவும், தேவையை பூர்த்தி செய்ய புதிய தடுப்பூசிகளின் பாரிய உற்பத்தியைத் தொடங்கவும் முடியும் என்றும் அது கூறியது.

சினோவக் முன்னர் காமா மற்றும் டெல்டா வகைகளுக்கு எதிராக செயலிழந்த தடுப்பூசிகளை உருவாக்கியது, எனினும் அதன் அசல் தடுப்பூசி வடிவமைப்பை மாற்றவில்லை, அது முந்தைய தாக்கங்களுக்கு எதிராக பயனுள்ளதாக காணப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .