2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மருத்துவ உலகில் புதிய சாதனை

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 28 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகம் முழுவதும் உள்ள மக்கள் நாள்தோறும் புதுவித நோய் கிருமிகளால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அத்தகைய கிருமிகளில் இருந்து சிறந்த முறையில் மக்களை பாதுகாக்க புதிய நுண்ணுயிர் எதிர்ப்பியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தாவரத்தில் இருந்து வெளியாகும் நச்சிலிருந்து இப் புதிய நுண்ணுயிர் எதிர்ப்பி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்ப்பட்டுள்ளது.  

பிரித்தானியா, ஜேர்மனி மற்றும் போலந்து ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நுண்ணுயிர் எதிர்ப்பி ஆனது இதற்கு முன்பாக பயன்படுத்தபட்டு வரும் நுண்ணுயிர் எதிர்ப்புகளைவிடவும் அதிக திறன் கொண்டது என்றும் இதில் பக்க விளைவுகள் எதுவும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆராய்ச்சியாளர்களின் இக்கண்டுபிடிப்பு மருத்துவத் துறையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனக்  கூறப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .