2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உலக சாதனை படைத்த வர்ணப் பூச்சு

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 20 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் உள்ள பர்டியூ(Purdue) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய சுவர்களுக்குப் பூசப்படும் வெள்ளை நிறப் பூச்சானது உலகிலேயே தூய வெண்மை நிறம் கொண்ட பூச்சு என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளது.

இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஆராய்ச்சியாளர் ”உலக சாதனை படைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. உலக வெப்பமயமாதலைத் தடுக்கும் வகையில் மட்டுமே இந்த வர்ணப் பூச்சினை உருவாக்கியுள்ளோம் ” என்றனர்.



அத்துடன் ”பொதுவாக சந்தைகளில் கிடைக்கும் சாதாரண வெள்ளை பூச்சு 80% முதல்
90% சூரிய வெப்பத்தைப் பிரதிபலிக்கும், மேலும் இவை சூரிய வெப்பத்தை பெருமளவில்
தடுக்காது. ஆனால் நாங்கள் உருவாக்கிய வர்ணப் பூச்சானது 98.1% அளவுக்கு சூரிய கதிர்வீச்சை பிரதிபலிக்கும்.

இது பிரதிபலிக்கும் வெப்பத்தை விட மிகவும் குறைந்த அளவே வெப்பத்தை கிரகித்துக்
கொள்கிறது. இந்த பெயிண்ட் அடிக்கப்படும் கட்டிடம் எந்த ஆற்றலையும்
எடுத்துக்கொள்ளாமலே சுற்றுப்புற வெப்பநிலையைக் குளிர்வாக வைக்கிறது.

குறிப்பாக பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படும் குளிரூட்டிகளைக் காட்டிலும்
இது அதிக ஆற்றல் வாய்ந்ததாகும் என்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X