2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

16 வயதுக்கு உட்பட்டோருக்கு புதிய கட்டுப்பாடு

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 26 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

“அவுஸ்திரேலியாவில் , 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தப் பெற்றோரின் அனுமதியைப் பெற வேண்டும்” என்ற சட்டத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய மக்களின் தகவல்களையும் அந்தரங்கத்தையும் பாதுகாப்பதே இச்சட்டத்தின் நோக்கம் எனக் கூறப்படுகின்றது.

மேலும் இச் சட்டத்திற்கு இணங்காத இணையத் தளங்களுக்கு 7.5 மில்லியன் டொலர்கள்  வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சமூக ஊடக நிறுவனங்கள், பயனாளர்களின்  வயதை நிர்ணயிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்ட புதிய விதிமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் சமூக ஊடகங்களுக்கு ஆகக் கூடுதலான வயது வரம்புகளை விதிக்கும் நாடுகளில் ஒன்றாக அவுஸ்திரேலியா இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .