2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இந்தவார பலன்கள் (16.02.2014 - 22.02.2014)

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 15 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தவார பலன்கள் (16.02.2014 - 22.02.2014)



அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

தன்னைச் சார்ந்தவர்களுடன் ஒளிவு மறைவின்றி பழகும் வெண்மையான உள்ளம் கொண்ட மேட ராசி அன்பர்களே...!

இந்த வாரம் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்நல்ல மனிதர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய உக்திகளை செலுத்தி இலாபம் அதிக அளவில் கிடைக்கப்பெறுவீர்கள். புதிய முயற்ச்சிகள் வெற்றியை  தரும்  மனதிற்கு பிடித்தமான விஷயங்களில் அதிக அளவில் ஈடுபடுவீர்கள். வார இறுதியில் மனதில் விரக்தி உண்டாகும். உணவில் நாட்டம் குறையும். வீணாண மருத்துவ செலவுகள்  அதிகமாக காணப்படும்.  மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்கும் சூழ் நிலை ஏற்படும்.பணத்திற்குதட்டுப்பாடுகள் காணப்படும். எனவே கவனமாக இருப்பது அவசியமாகும்.
அதிர்ஷ்ட திகதி: 19
அதிர்ஷ்ட நிறம்: சிகப்பு, ஆரஞ்சு
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)



சந்திராஷ்டமம்
பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி காலை 04.53 மணியிலிருந்து பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி காலை 09.08 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சீனையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்கவும்.
குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடும் 1-2ம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தமது வாக்கு சாதுர்யத்தாலும் இனிய சுபாவத்தினாலும் வாழ்வில் வெற்றியை பெற்றுக்கொள்ளும் இடப ராசி அன்பர்களே...!

இந்த வாரம் தொடக்கத்தில் உங்களுக்கு வீண் அலைச்சல்கள் மற்றும் வேண்டாத பேச்சுக்களால் பிரச்சினைகள் மற்றும்  செய்யும் செயல்களில் சிறு சிறு தவறுகள் தோன்றும். எனவே நிதானம் தேவை. தலைவலி மற்றும் பிரயாணங்களினால் உடல் சோர்வு மனதளவில் பயம் உண்டாகும். இருந்தாலும் இந்த வார இறுதி உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும். குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் வருகையினால் மகிழ்ச்சி உண்டாகும். நல்லவர்களின் சேர்க்கைகள் மூலம் புதிய வியாபார ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தேடித்தரும். பொழுதுபோக்குகளில் ஈடுபட்டு மனதில் மகிழ்ச்சி கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திகதி: 20
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

வலிமையான உள்ளமும் செயல்களில் சுறுசுறுப்பும் கொண்ட மிதுன ராசி அன்பர்களே...!

இந்த வார உங்களுக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் மற்றும் அதிக அளவில் லாபங்கள் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். முயற்சி செய்தால் காரியங்களில் வெற்றி பெறலாம் பணதட்டுப்பாடுகளை சமாளிப்பீர்கள். அரசினரால் தனலாபங்கள் கிடைக்கப்பெறும். பெண்களுடன் வீணான விவாதங்களை தவிர்க்கவும் இல்லையெனில் அவதிப்படும் வாய்ப்புகள் உண்டாகும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும். வார இறுதியில் உடல் நிலையில் சோர்வு மற்றும் வீண் சிரமங்கள் ஆகியவை காணப்படும். பொருள் சேதம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திகதி: 17
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம் நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்




புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

மென்மையான சுபவமும் எல்லோருடனும் எளிமையாக பழகும்  உள்ளம் கொண்ட கடக ராசி அன்பர்களே...!

இந்த வாரம் உங்களுக்கு சுமாராகவே செல்லும். தீயவர்களின் நட்பினால் வியாபாரத்தில் நஷ்டம் உண்டாகும். சிலவிதமான சிக்கல்கள் மற்றும் வேண்டாத பேச்சுக்களால் மனக்கசப்புகள்  தோன்றும். திருடர்களினால் பயம் உண்டாகும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.வேண்டாத வாய் வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. நீங்கள் எதிர்பார்த்த  உதவிகளை பெண்களின் மூலம் கிடைக்கப்பெறுவீர்கள். புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். பணியிடத்தில் போட்டிகள் காணப்படும். எந்த ஓரு செயலையும் மன திருப்தியுடன் செய்ய இயலாது. எனவே தியானம் மற்றும் ஆலய தரிசனங்கள் செய்து வந்தால் மனதை ஒருநிலைப்படுத்தலாம்.
அதிர்ஷ்ட திகதி: 17
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை வெளிர் மஞ்சள்.
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

யாருக்காகவும் தனது கொள்கைகளை விட்டுகொடுக்காது பயமற்ற பேச்சும் செயலும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே...!

இந்த வாரம் தொடக்கத்தில் அரசினரால் தனலாபங்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்களின் வருகையினால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். நல்ல இனிமையான உறக்கங்கள் கிடைக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். . வியாபாரம் சம்மந்தமாக வெளியூர் செல்லும் சூழ்நிலைகள் உருவாகலாம். அதிக பணலாபம் உண்டாகும். நல்ல முன்னேற்றம் கிடைக்கப்பெறுவீர்கள். வெளிநாட்டில்  இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். அதிகாரிகளுடன் ஆரோக்கியமான போட்டிகள் உண்டாகும். தீய நட்பினை தவிர்த்தால் தேவையில்லாத நஷ்டங்களை தவிர்க்கலாம்.இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும்.
அதிர்ஷ்ட திகதி: 18
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்




உத்திரம் 2, 3, 4, அஸ்தம் சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தான் செய்யும் எந்த காரியத்திலும் வாய்மையும் முன்னுரிமையும் பெற எண்ணும் கன்னி ராசி அன்பர்களே...!

இந்த வார தொடக்கத்தில் உங்களுக்கு நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகள் கிடைக்கும் நல்லவர்களுடைய சேர்க்கை மகிழ்ச்சியைக் கொடுக்கும்  தனலாபங்கள் உண்டாகும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வரும். இசையில் ஆர்வம் அதிகரிக்கும் அதனால் மனதில் மகிழ்ச்சி  ஏற்படும்.  புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா சென்று மகிழ்வீர்கள். வார இறுதியில் தேவையில்லாத செலவுகள் வீணாண சிரமங்கள்மற்றும் மயக்கம் உடல் சோர்வு ஆகியவை காணப்படும். வியாபாரத்தில அலைச்சல் உண்டாகும். கவனத்துடன் இருப்பது அவசியமாகும்;. தீயவர்களின் நட்பினால்  நட்டமடைதல் இதனால் சிலவிதமான சிக்கல்கள் உருவாகும் .  மனதளவில் கஷ்டங்கள் தோன்றும்.
அதிர்ஷ்ட திகதி: 21
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு சிகப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

தேடி சென்று உதவிடும் குணமும் முடிவுகளை பராது முன்னேற்றத்திற்காக முழு மூச்சாக செயல்படும் துலா ராசி அன்பர்களே...! 

இந்த வாரம் உங்களுக்கு மேல் அதிகாரிகளுடன் சுமூகமான உறவுகள் காணப்படும். பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளில் செலவிடுதல் மற்றும் சுற்றத்தினர் நண்பர்களின் வருகை ஏற்படும் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும் .வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். காரியங்கள் அனைத்தும் சாதனைகள் மற்றும் வெற்றியடையும். நீங்கள் கேட்ட உதவிகள் உடனே கிடைக்கப்பெறும். தொழில் சம்மந்தமாக வெளியூர் செல்லும் சூழ்நிலை உருவாகும். வார இறுதியில் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். மனதில் குழப்பங்கள் தோன்றும். மனம் சஞ்சலமடையும் . இல்லத்தில் திருட்டு பயம் உண்டாகும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும். மனதளவில் பயம் தோன்றி மறையும். இந்த வாரம் உங்களுக்கு சுமாராகவே செல்லும்.
அதிர்ஷ்ட திகதி: 21
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு சிகப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி



விசாகம் 4, அனுசம், கேட்டை, முடிய ஆக 9- பாதங்கள்.

ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடயவர்களே, எடுத்த காரியத்தை முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்ற விருட்ச்சிக ராசி அன்பர்களே...!         
     
இந்த வாரம் தொடக்கம் உங்களுக்கு வியாபாரத்தில் பிரச்சினை ஏற்பட்டு பகை உண்டாகும். காரியங்கள் தடைபடுதல்;, சாப்பாட்டில் வெறுப்பு ஏற்படும். வீணான அலைச்சல்கள்  உண்டாகும். காரியத்தில் தடைகள் காணப்படும். தவிர்க்க  முடியாத சில வீண் செலவுகள் காணப்படும். மனக்கசப்புகள் உண்டாகும். வாரம் தொடக்கம் உங்களுக்கு சங்கடங்களை கொடுத்தாலும் வார இறுதியில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் புதிய உக்திகளை செலுத்தி வெற்றி காண்பீர்கள். இலாபங்கள் அதிக அளவில் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் காரியங்களில் வெற்றி உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை ஆகியவை கிடைக்கும். புதிய ஆடைகளை அணியும் சூழ்நிலை உருவாகும். இதனால் மனதில் உற்சாகம் பிறக்கும் நல்ல காரியங்கள் செய்வதற்கு வழி வகைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திகதி: 22
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அனைவரிடமும் அன்பு காட்டும் உள்ளமும் தீமைகளை கண்டு விலகி செல்லும் பக்குவம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே...!

இந்த வாரம் அரசாங்கத்தினரால் நடைபெறும் காரியங்கள் அனைத்தும் அனுகூலமாக முடியும். வெற்றி உண்டாகும். நல்ல காரியங்கள் செய்வதற்கு வழி வகைகள் கிடைக்கும். உடலில்  சிறு சிறு உபாதைகள் காணப்படும். கவனத்துடன் இருப்பது அவசியமாகும். வியாபாரம் சம்மந்தமாக வெளியூர் செல்லும் நிலை ஏற்படும். எதிலும் ஜாக்கிரதையாக இருப்பது அவசியமாகும். இடம் மாறும் சூழ்நிலை உண்டாகும் மகான்களின ஆசிர்வாதம் கிடைக்கும். நல்ல நண்பர்களின் உறவுகள் கிடைக்கும்; மனதில் மகிழ்ச்சி உருவாகும். வெளியிடங்களுக்கு சென்று உணவு உண்ணும் நிலை உருவாகும். மனதளவில் மகிழ்ச்சிகள் இருந்தாலும் உடலளவில்  அலைச்சல்கள் ஏற்படும். பிறருடைய உதவியை எதிர்பார்க்க வேண்டி வரும். வீணாண மனக்கஷ்டங்கள் தோன்றும்.
அதிர்ஷ்ட திகதி: 22
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்



உத்திராடம் 2, 3, 4 திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

அவனின்றி ஒரு அனுவும் அசையாது என்பதில் இறைவனுக்கு முதலிடம் அளிக்கும் மகர ராசி அன்பர்களே...!   

இந்த வாரம் உங்களுக்கு  மனதில் குழப்பமான சூழ்நிலையே நிலவும். பெண்களுடன் வீண் விவாதங்களே உண்டாகும் எனவே பொறுமையை கடைபிடிப்பது அவசியமாகும். சில துக்கமான சூழ்நிலைகள் நிலவும் செய்யும் காரியங்களில் சிறு தவறுகள் நடைபெறும். முயற்ச்சி செய்யும் காரியங்கள் அனைத்தும் தோல்வியில் முடியும். அலைச்சல்கள் காணப்படும் பணத்திற்கு தட்டுப்பாடுகள் காணப்படும். இருந்தாலும் ஒரு சில இடங்களில் வெற்றிகள் கிடைக்கும். உணவில் வெறுப்பு உண்டாகும்  இதனால் வயிற்றுவலி ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படும். பயணங்களில் கவனம் அவசியமாகும். எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். வார தொடக்கம் சுமாராக இருந்தாலும் இறுதியில் மகிழ்ச்சியாகவே செல்லும்.
அதிர்ஷ்ட திகதி: 21
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிஷ்ட தெய்வம்: பெருமாள்




அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எதற்கும் தளராத நெஞ்சமும் ஆடம்பரம் இன்றி வாழ விரும்பும் கும்ப ராசி அன்பர்களே...!

இந்த வாரம் வியாபாரத்தில் புதிய தொடர்புகள் சுற்றத்தினர் நண்பர் வருகை. ஆதனால் பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளில் செலவிடுதல் ஆகியவை உண்டாகும். குடும்பத்தில் உள்ள பெண்கள் மூலம் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் இருக்கும் தருணங்கள் உருவாகும். மனதளவில் அலைச்சல்கள் உருவாகும். முயற்சி செய்தால் காரியங்களில் வெற்றி பெறலாம். ஆலய தரிசனங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். மனம் அமைதியடையும். வயது மூத்தவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். நல்லவர்களின் சேர்;க்கை நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகள் கிடைக்கும் மனதில் உற்சாகம் பிறக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும்.
அதிர்ஷ்ட திகதி: 17
அதிர்ஷ்ட நிறம்: சிகப்பு, ஆரஞ்சு
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)


சந்திராஷ்டமம்
பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி காலை 12.04 மணியிலிருந்து பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி மாலை 09.40 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்கவும்.
குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி; முடிய ஆக 9-பாதங்கள்.

தனகென்று மட்டும் எண்ணாது பிறரின் நலனுக்காக செயல்படும் பரந்த உள்ளம் கொண்ட மீன ராசி அன்பர்களே...!  

இந்த வாரம் உங்களுக்கு வியாபாரத்தில் புதிய வழிகளை கையாண்டு வியாபாரத்தை பெருக்கிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை உருவாகும். இதனால் லாபங்கள் உண்டாகும் வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் காணப்படும். வேலை நிமித்தமாக இடமாற்றங்கள் உண்டாகும். வார இறுதியில் வீணான செலவுகள் உருவாகும். சிலவிதமான சிக்கல்கள் மற்றும் நஷ்டங்கள் ஆகியவைகளை அடைய நேரிடும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.வாய் வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியமாகும். முயற்சியில் தோல்வியான நிலை உண்டாகும் இதனால் மனதில் துக்கம் காணப்படும்.
அதிர்ஷ்ட திகதி: 22
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா


சந்திராஷ்டமம்
பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி மாலை 09.40 மணியிலிருந்து பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி காலை 04.53 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள் இபுதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்கவும்.
குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .