2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இந்தவார பலன்கள் (24.08.2014 - 30.08.2014)

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தவார பலன்கள் (24.08.2014 - 30.08.2014)


அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்


எல்லோருக்கும் நல்லதே செய்யும் மேட ராசி அன்பர்களே...!


இந்த வாரம் பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய உறவினர்கள் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பங்குகள் மூலமாக பணம் வரும். திருமணப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் வரலாம். தள்ளிப் போன அரசாங்க விஷயங்கள் நல்லதாகவே முடியும். கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன விவாதங்கள் வந்து போகும். உத்தியோகத்தில் சில சவால்களை சந்திக்க வேண்டிவரும். அனுபவ அறிவை பயன்படுத்தி முன்னேறும் வாரமிது.
அதிர்ஷ்ட திகதி: 26
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம் நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்



கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1௨ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்

தேனீக்களைப் போல சேமிக்கும் குணம் கொண்ட இடப ராசி அன்பர்களே...!


இந்த வாரம் உங்கள் மனதிற்கு சரியென பட்டதைச் செய்வீர்கள். உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். அதிகாரப் பொறுப்பில் உள்ளவர்கள் உதவுவார்கள். அரசாங்கத்தின் அனுமதிகள் சுலபமாக கிடைக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். இதமாகப் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை புதிய இடத்திற்கு மாற்றுவீர்கள்.
அதிர்ஷ்ட திகதி: 27
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்



மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்

சகிப்புத் தன்மை மற்றும் சண்டைக்காரர்களிடமும் சகஐமாக பேசும் மிதுன ராசி அன்பர்களே...!           


இந்த வாரம் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். விசேடங்களை முன்னின்று நடத்துவீர்கள். புதிய பொறுப்புக்களுக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். எதிரிகள் அடங்கிப்போவார்கள். திருமண விஷயங்களில் அவசரம் வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை கைமாற்றுவீர்கள்.  உங்களுடைய பேச்சிற்க மதிப்பு கூடும். பிள்ளைகள் விஷயத்தில் சிறிது ஆதங்கம் காணப்படும். எந்தவொரு காரியத்திலும் அவசரம் வேண்டாம். வசதி வாய்ப்புக்கள் பெருகும் வாரம் இது.
அதிர்ஷ்ட திகதி: 24
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மஞ்சள் 
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்



புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்

சீர்திருத்த சிற்பிகளாகவும் பிறர் விடயத்தில் தலையிடாத கடக ராசி அன்பர்களே...!


இந்த வாரம் உங்களின் பிடிவாத போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். உறவினர்கள் நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். அரசால் ஆதாயம் அடைவீர்கள். குடும்ப விஷயத்தில் மற்றவர்களை தலையிட அனுமதிக்காதீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட வேண்டாம். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற போராட வேண்டி இருக்கும். எனவே கவனம் அவசியம். சக ஊழியர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம்.
அதிர்ஷ்ட திகதி: 27
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு சிகப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்

தெளிந்த நீரோடை போல் தீர்க்கமாக முடிவெடுக்கும் சிம்ம ராசி அன்பர்களே...!


இந்த வாரம் உங்களின் செல்வாக்கு கூடும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பொது விழாக்கள் சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வேலைக்கு காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். இருந்த போதிலும் அவ்வப்போது பழைய கடன்களை நினைத்து அச்சம் கொள்வீர்கள். தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு ஆலோசனை சொல்வீர்கள். சந்தை நிலவரம் அறிந்து வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். குழப்பங்களில் இருந்து விடுபடும் வாரமிது.
அதிர்ஷ்ட திகதி : 29
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)



உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்


துயரங்களைக் கண்டு துவளாத கன்னி ராசி அன்பர்களே...!

இந்த வாரம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த பணமும் வரும். வீட்டைப் புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொலைதூரப் பயணங்களில் கவனம் தேவை. உயரதிகாரிகள் உங்களிடம் மனம் விட்டுப் பேசுவார்கள். உணவு சார்ந்த தொழில்களினால் லாபம் உண்டாகும். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு பெருகும். பெண்களின் புதிய தொழில் முயற்ச்சிகள் வெற்றி அடையும்.  எந்த ஒரு காரியத்தையும் நீங்களே நேரில் சென்று முடிப்பது நல்லது.
அதிர்ஷ்ட திகதி: 30
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா


சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் பாதங்கள்

அநியாயத்திற்கு துணை போகாமல் நீதியை மட்டும் விரும்பும் துலா ராசி அன்பர்களே...!

இந்த வாரம் இதுவரை இருந்த எதிர்ப்புக்கள் நீங்கும். அரசாங்க அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புக்களை ஒப்படைப்பார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். உங்களைப்பற்றி தவறாகப் பேசியவர்கள் இப்பொழுது உங்களைப் புரிந்து கொண்டு வருந்துவார்கள். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். தடைபட்ட உயர்கல்வியைத் தொடர்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளைத் தாண்டி ஓரளவு சம்பாதிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திகதி: 29
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)


விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்


தனக்கென எதையும் எடுத்து வைக்காமல் தராதரம் அறிந்து பழகும் விருச்சிக ராசி அன்பர்களே...!
       
இந்த வாரம் தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வீடு மனை வாங்க, விற்க மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையும். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பெற்றோர்கள் உங்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் இலாபம் பெருகும். வெற்றிப்பாதையில் பயணிக்கும் வாரமிது.
அதிர்ஷ்ட திகதி: 28
அதிர்ஷ்ட நிறம்: சிகப்பு, ஆரஞ்சு
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)


மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்


மென்மையான சிந்தனை மற்றும் வன்முறையைக் கண்டு அஞ்சாத தனுசு ராசி அன்பர்களே...!

இந்த வாரம் பெண்களின் புதிய தொழில் முயற்சிகள் வெற்றி அடையும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அண்டை மாநிலத்தில் அல்லது வெளிநாட்டில் சிலருக்கு வேலை கிடைக்கும். அவ்வப்போது வீண் விரையம் மற்றும் இனம் தெரியாத கவலைகள் வந்து போகும். கெட்ட நண்பர்களின் சவகாசங்களில் இருந்து விடுபடுவீர்கள். கட்டிட உதிரி பாகங்கள் மூலம் இலாபம் உண்டு. உயர் அதிகாரிகள் புதிய பொறுப்புக்களை ஓப்படைப்பார்கள். நீண்ட கால ஆசை நிறைவேறும். அரசால் அனுகூலம் உண்டு.
அதிர்ஷ்ட திகதி: 25
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்


உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்

விழுவதெல்லாம் எழுவதற்கே என்று எண்ணும் மகர ராசி அன்பர்களே...!

இந்த வாரம் சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். வங்கியில் லோன் வாங்குவீர்கள். வேற்று நாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள். பெண்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறும். வியாபாரத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். வேலைச்சுமை அதிகமாகும். உயர் அதிகாரிகள் உங்களுக்கு உதவுவார்கள். திடீர் திருப்பங்களும் யோகங்களும் நிறைந்த வாரமிது.
அதிர்ஷ்ட திகதி: 27
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்


அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்


சொல்லாலோ செயலாலோ மற்றவர்களை காயப்படுத்தாத கும்ப ராசி அன்பர்களே...!

இந்த வாரம் தள்ளிப்போன விடயங்கள் முடிவுக்கு வரும். பிள்ளைகளின் திறமைகளை இனம் கண்டறிவீர்கள். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். அலைச்சல் குறையும். வெளிநாட்டு நிறுவனத்தில் பணிவாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வீடு பராமரிப்பு செலவுகள் அதிகமாகும். நண்பர்களின் வருகை உற்சாகத்தைக் கொடுக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.
அதிர்ஷ்ட திகதி: 24
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா


பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்

மண் மனம் மாறாத மீன ராசி அன்பர்களே...! 


இந்த வாரம் குடும்பத்தில் அமைதி நிலவும். வருமானம் உயரும். வேலைக்கு முயற்ச்சி செய்த இடத்தில் இருந்து நல்ல பதில் வரும். பிள்ளைகளின் படிப்பு திருமணம் சம்மந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். தள்ளிப்போன வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும். பூர்வீக சொத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். முக்கிய விழாக்களுக்கு தலைமை தாங்குவீர்கள். தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான அறிவிப்புகள் மூலம் போட்டிகளைச் சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள்.
அதிர்ஷ்ட திகதி: 29
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, சிகப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .